Breaking News
Home / latest-update / நாளையே இறுதி தினம் பதிவு செய்யாதவர்கள் கைது செய்யப்படுவார்கள்…!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

நாளையே இறுதி தினம் பதிவு செய்யாதவர்கள் கைது செய்யப்படுவார்கள்…!

ஊரடங்கு சட்டத்தை மீறிய 7619 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவற்துறை ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

அந்த காலப்பகுதியில் உந்துருளிகள், முச்சக்கர அடங்கலாக ஆயிரத்து 864 வாகனங்கள் காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, கடந்த மார்ச் மாதம் 16 ஆம் திகதியின் பின்னர் நாடு திரும்பியவர்களை பதிவு செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நாளையுடன் நிறைவடைகின்றது.

பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

நாளைய தினத்திற்குள் பதிவு செய்யாத அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Check Also

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 23 பேர் பலி….!

சிங்கப்பூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,366ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்றால் 506 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர் …

error: Content is protected !!