Breaking News
Home / latest-update / இரு பிரதேசங்கள் சற்று முன்னர் முழுமையாக மூடப்பட்டது – 6.00 மணிக்கான விசேட செய்தி
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

இரு பிரதேசங்கள் சற்று முன்னர் முழுமையாக மூடப்பட்டது – 6.00 மணிக்கான விசேட செய்தி

களுத்துறை மாவட்டத்தில் அட்டுலுகம மற்றும் கண்டி மாவட்டத்தில் அக்குரனை ஆகிய இரண்டு பகுதிகளும் முழுமையாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பகுதியாக அரசாங்கம் பிரகடனபடுத்தியுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் அட்டுலுகம பகுதியில் பல இடங்களுக்கு சென்றதாகவும் இதனால் அப்பகுதி முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதே போன்று அக்குரனையில் அடையாளங்காணப்பட்ட ஒருவரும் அப்பகுதியில் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளார் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளமையை அடுத்தே குறித்த இரு பகுதிகளும் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தி முடக்கப்பட்டுள்ளது.

குறித்த இரு பிரதேசங்களிலிருந்து வெளியேறுவதற்கும், குறித்த பிரதேசங்களுக்கு செல்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கொழும்பு கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு மீள் அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு அமுலில் காணப்படும் என ஜனாதிபதியின் செயலாளர் காரியாலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய அனைத்து மாவட்டங்களுக்கும் நாளை காலை 6 மணிக்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு பிற்பகல் 2 மணி முதல் மீண்டும் அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு நிறைவடையும் தினம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் அறிவிக்கப்படவில்லை.

அத்துடன் மாவட்டங்களுக்கிடையில் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் போக்குவரத்து அனுமதிக்கப்படும் என்பதோடு, குறித்த அனுமதியினை தவறாக பயன்படுத்துபவரகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 23 பேர் பலி….!

சிங்கப்பூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,366ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்றால் 506 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர் …

error: Content is protected !!