Breaking News
Home / latest-update / மனிதனை தாக்கிய கொரோனா பூனையையும் தாக்கியது… பொது மக்களுக்கான எச்சரிக்கை….!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

மனிதனை தாக்கிய கொரோனா பூனையையும் தாக்கியது… பொது மக்களுக்கான எச்சரிக்கை….!

பெல்ஜியம் நாட்டில் பெண் பூனை ஒன்றிற்கு கொவிட் 19 என அழைக்கப்படும் என கொரோனா தொற்று பரவியுள்ளமை உறுதிபடுத்தப்பட்டது.

பெல்ஜியத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்ட நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு வருகின்றார்.

அவர் வளர்த்த செல்லப்பிராணிக்கு பரவியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் குறித்த பூனை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே குறித்த பெண் பூனைக்கும் கொரோனா வைரஸ் தொற்றானது பரவியிருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை ஹொங்கொங் நாட்டில் இரு நாய்களுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளமை உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொரோனா தொற்று மிருகங்களுக்கும் பரவி வருகின்ற நிலைில், பிரித்தானியாவில் கொரோனா தொற்றினை கண்டறிய காவல் துறையினரால் மோப்ப நாய்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா தொற்று மிருகங்களுக்கும் பரவும் அபாயம் காணப்படுகின்றமையினால் இலங்கை மக்கள் செல்லப்பிராணிகளை பராமரிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பது அவசியமாக காணப்படுகின்றது.

source : www.hirunews.lk

Check Also

போராட்டக்காரர்களின் முற்றுகைக்குள் வெள்ளைமாளிகை! ட்ரம்பை நெருங்க முயற்சித்த முகமூடி மனிதர்கள்

அமெரிக்காவில் கடந்த திங்கட்கிழமை கறுப்பினத்தவர் ஒருவர் பொலிஸாரால் படுகொலைசெய்யப்பட்டதையடுத்து அமெரிக்காவில் இப்போது வரை பாரிய போராட்டங்களும், தீயிடல்களும் இடம்பெற்றுவருகின்றன. அந்த …

error: Content is protected !!