Breaking News
Home / latest-update / ஊரடங்கு உத்தரவு தொடர்பில் மாலை 6.20 இற்கு வெளியான விசேட செய்தி……!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் மாலை 6.20 இற்கு வெளியான விசேட செய்தி……!

கொரோனா வைரஸை இல்லாதொழிக்கும் நோக்கில் கண்டி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு மீள் அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் இன்று காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதோடு பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டதுடன், எதிர்வரும் முதலம் திகதி புதன்கிழமை காலை 6 மணிவரை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய நடவடிக்கைகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, சிலாபம் நாத்தாண்டியா பகுதியில் நான்கு மாத குழந்தை உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

சற்று முன்னர் இவர்களுக்கு கொரோனா தொற்று காணப்படுகின்றமை உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இலங்கையில் கொரோனா தொற்றினால் 122 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

தடுப்பூசி கிடைக்கும் வரை கொரோனா பரவுவதை நிறுத்த முடியாது: தென்னாபிரிக்க அதிபர் தகவல்

கொரோனா தொற்றுடன் வாழப் பழக வேண்டும் என்று தென்னாபிரிக்க அதிபர் சிரில் ரமபோசா மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அதிகளவில் தொற்று …

error: Content is protected !!