Breaking News
Home / latest-update / பல மாவட்டங்களுக்கு நாளைய தினம் தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு உத்தரவு..!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

பல மாவட்டங்களுக்கு நாளைய தினம் தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு உத்தரவு..!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் நாளை, காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் நாளை பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய தேவைகளுக்காக மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு உதவும் நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே என்பதால் அந்த நடைமுறைகளையும் அறிவுறுத்தல்களையும் பொறுப்புடன் பின்பற்றுமாறு அரசாங்கம் மக்களிடம் கோருவதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் களுத்துறை மாவட்டத்தில் அட்டுளுகம மற்றும் கண்டி மாவட்டத்தில் அகுரணை கிராமங்கள் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக குறிப்பிடப்பட்டள்ளன.

எவரும் இந்த கிராமங்களுக்கு உள்வருவதோ அல்லது வெளியேறுவதோ முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 23 பேர் பலி….!

சிங்கப்பூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,366ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்றால் 506 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர் …

error: Content is protected !!