Breaking News
Home / latest-update / கொரோனா பாதிப்பு – பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கிய அக்‌ஷய்குமார்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

கொரோனா பாதிப்பு – பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கிய அக்‌ஷய்குமார்

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பல்வேறு பிரபலங்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, முக்கிய பிரமுகர்கள் பலர் மத்திய, மாநில அரசுகளின் நிவாரண நிதிக்கு நிதியுதவி செய்து வருகின்றனர்.

இதற்கிடையே, கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற நிதியுதவிகளை மக்கள் வழங்கலாம் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், கொரோனா வைரஸ் பாதிப்புக்காக பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு 25 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

Check Also

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 23 பேர் பலி….!

சிங்கப்பூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,366ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்றால் 506 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர் …

error: Content is protected !!