Breaking News
Home / latest-update / கொரோனாவை பரப்பினால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை – தமிழக அரசு
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

கொரோனாவை பரப்பினால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை – தமிழக அரசு

கொரோனா வைரஸ் தொற்றை பரப்பினால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு தொடர்பாக தமிழக அரசினால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய குற்றவியல் சட்டம் 270ஆவது பிரிவு படி, இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அதாவது மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வீரியமிக்க வைரஸ் பரவலுக்கு, தெரிந்தே எவர் ஒருவர் காரணமாக இருப்பது உறுதியானால், 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும்.

அரசின் உத்தரவை மீறி, ஆபத்தான வைரஸ் தொற்று பரவுவதற்கான செயலில் ஈடுபட்டாலோ அல்லது அலட்சியமாக நடந்து கொண்டாலோ, இந்திய குற்றவியல் சட்டம் 269ஆவது பிரிவின் கீழ், 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

கொரோனா வைரஸ் அறிகுறியுடன் தனிமை முகாம்களில் தங்க அறிவுறுத்தப்பட்டவர்கள், அரசின் உத்தரவுக்கு கீழ் படியாமல் இருந்தால், இந்திய குற்றவியல் சட்டம் 271 வது பிரிவு படி, 6 மாத சிறை தண்டனை மற்றும் அபராதம், அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த மற்றுமொரு நபர்..!

கொவிட்-19 வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து மற்றுமொரு நபர் இன்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலை …