Home / latest-update / இன்றைய ராசிபலன்3/23/2020
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

இன்றைய ராசிபலன்3/23/2020

மேஷம்

மேஷம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் விஐபி கள் வாடிக்கையாளர்களாவார்கள். தைரியமாக முக் கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிந்தனைத் திறன்
பெருகும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: உங்கள் செயலில் வேகம் கூடும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார் கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உத்தியோகத்தில் தலை மையின் நம்பிக்கையை பெறுவீர்கள். சாதித்துக் காட்டும் நாள்.

மிதுனம்

மிதுனம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். அவசரத்திற்கு கைமாற்றாக வாங்கி யிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூல் ஆகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிரடி மாற்றம் உண் டாகும் நாள்.

கடகம்

கடகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியா பாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற் பீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். நிதா னம் தேவைப்படும் நாள்.

சிம்மம்

சிம்மம்: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். வாக னத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவுசுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோ கத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். தன்னம் பிக்கை பெருகும் நாள்.

கன்னி

கன்னி: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர் கள். அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடியும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

துலாம்

துலாம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமை உணர்வு டன் செயல்படுவார்கள். உத்தியோகத் தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். நினைத்தது நிறைவேறும்
நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயா ருக்கு கை ,கால், வலி சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் புதுபங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பழையநினைவுகளில் மூழ்கும் நாள்.

தனுசு

தனுசு: சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார் கள். அரசால் அனுகூலம் உண்டு. வியா பாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள் வீர்கள். தைரியம் கூடும் நாள்.

மகரம்

மகரம்: குடும்பத்தில் நிம்மதி உண்டு. இழுபறியாக இருந்தவேலைகள் முடியும். எதிர் பார்த்த பணம் கைக்கு வரும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

கும்பம்

கும்பம்: ராசிக்குள் சந்திரன் தொடர் வதால் எந்த காரியத்தையும் நினைத்த வேகத்தில் முடிக்க முடியாமல் தடை தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தி யோகத்தில் அதிகாரிகளால் மதிப்பு கூடும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

மீனம்

மீனம்: மறைமுக விமர்சனங்களும் தாழ்வு மனப்பான்மையும் வந்து செல்லும். உறவினர் நண்பர்களு டன் நெருடல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

Check Also

நாம் அனைவரும் ஒன்றினைய வேண்டும்…!

உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காணப்படுகின்ற நிலையில் அனைத்துஇலங்கையர்களின் ஒரே நோக்கமாக காணப்படுவது இலங்கையை கட்டியெழுப்புவதே என பிரதமர் மஹிந்த …

error: Content is protected !!