Breaking News
Home / latest-update / இன்றைய ராசிபலன்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

இன்றைய ராசிபலன்

மேஷம்

மேஷம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதுத்தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியடையும். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். சிறப்பான நாள்.

ரிஷபம்

ரிஷபம்: தவறு செய்பவர்களை தட்டிக்கேட்பீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மிதுனம்

மிதுனம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். வெளி வட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

கடகம்

கடகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் திடீர் திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். சில நேரங்களில் நன்றி மறந்த சொந்தபந்தங்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டி இருக்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

சிம்மம்

சிம்மம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். வெளியூர்பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். விலை உயர்ந்த மின்னணு மின்சார பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

கன்னி

கன்னி: சமயோசிதமாகவும் சாமர்த்தியமாகப் பேசி சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர் பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திவரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். அமோகமான நாள்.

துலாம்

துலாம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் உயர் கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். கனவு நனவு ஆகும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். புது, பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

தனுசு

தனுசு: குடும்பத்துடன் ஆலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். நினைத்ததை முடிக்கும் நாள்.

மகரம்

மகரம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். புதுப் நட்பு மலரும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தடைகள் உடைபடும் நாள்.

கும்பம்

கும்பம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும். தலைச்சுற்றல் முழங்கால் வலி வந்து நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் மறை முகப்பிரச்னைகள் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் பனிப்போர் வந்து நீங்கும். இடம் பொருள்ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

மீனம்

மீனம்: கணவன்-மனைவிக்குள் வீண் விவாதம் வந்து செல்லும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்சினைகள் வந்து விலகும். எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.

Check Also

கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த மற்றுமொரு நபர்..!

கொவிட்-19 வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து மற்றுமொரு நபர் இன்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலை …