Breaking News
Home / latest-update / பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறிய 61 பேர் கைது
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறிய 61 பேர் கைது

பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறிய 61 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பண்டாரவளையில் 8 பேரும் ஹப்புத்தளை, தங்காலை, தவுலகல மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் வீதமும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் ஹட்டன் பகுதியில் 7 பேரும் கட்டுநாயக்க பகுதியில் 2 பேரும் சிலாபத்தில் 3 பேரும் கேகாலையில் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நல்லதண்ணி பகுதியில் 2 பேரும் தம்புள்ளையில் 9 பேரும் வலஸ்முல்ல பகுதியில் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பொலிஸ் ஊரடங்கு சட்டம் அடுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் பொதுமக்கள் தங்களின் வீடுகளில் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Check Also

கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான இரு இலங்கையர்கள் இங்கிலாந்தில் மரணம்..!

இங்கிலாந்தில் வசித்து வரும் இரண்டு இலங்கையர்கள் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு …