Breaking News
Home / latest-update / கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்குப் எப்படி பரவுகின்றது?
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்குப் எப்படி பரவுகின்றது?

உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ் கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்குப் எப்படி பரவுகின்றது? இதிலிருந்து நம்மை எப்படி காத்து கொள்ளலாம் என பற்றி இங்கு பார்ப்போம்.

இருமல் மற்றும் தும்மலின் வழியாக ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவும்.நோய்த்தொற்று இருப்பவர்களிடம் நெருக்கமாக இருப்பது, தொடுவது, கை குலுக்குவது ஆகியவற்றாலும் பரவும்.வைரஸ் தொற்று தேங்கியிருக்கும் ஏதாவது பொருளைத் தொடுவதின் மூலம் பரவும்.கண், வாய், மூக்கு ஆகியவற்றை கைகளைக் கழுவுவதற்கு முன்பாகத் தொடுவதால் பரவும்.அடிக்கடி கையை சோப்பு போட்டு 20 நொடிகளாவது நன்கு தேய்த்துக் கழுவுங்கள். கைகளைக் கழுவாமல் உங்களுடைய கண்கள், மூக்கு மற்றும் வாய்ப்பகுதியைத் தொடுவதைத் தவிர்த்திடுங்கள்.உடல் நலம் குன்றியவர்களிடம் நெருக்கமாக இருப்பதைத் தவிர்த்துவிடுங்கள்.ஒருவேளை தொற்று பரவி விட்டால் நோய்த்தொற்று இருப்பதாக உணர்ந்தாலோ அறிந்து கொண்டாலோ வீட்டை விட்டு வெளியில் செல்லாதீர்கள்.

மற்றவர்களை உங்களுக்கு அருகில் நெருக்கமாக வைத்துக் கொள்ளாதீர்கள். சுற்றியுள்ள பொருள்களையும் இடங்களையும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்.தும்மல் மற்றும் இருமல் வரும்போது வாய் மற்றும் மூக்குப் பகுதியை துணி அல்லது டிஸ்யூ கொண்டு மூடிக் கொள்ளுங்கள்.நோய்த் தொற்றிலிருந்து நம்மை நாம் காத்துக் கொள்ள முடியும்?வலி நிவாரணி மற்றும் காய்ச்சல் மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.குழந்தைகளாக இருந்தால் ஆஸ்பிரின் போன்ற மருந்துகளைத் தவிர்த்து விடுங்கள்.நீராவி கொண்டு ஆவி பிடியுங்கள். இருக்கும் இடத்தை கதகதப்பாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். சுடுதண்ணீரில் தினமும் இரண்டு முறையாவது குளிக்க வேண்டும்.லேசாக முடியாதது போல உணர்ந்தீர்கள் என்றால், வெளியில் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே ஓய்வெடுங்கள். நிறைய நீர் ஆகாரங்களைச் சாப்பிடுங்கள்.

Check Also

கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான இரு இலங்கையர்கள் இங்கிலாந்தில் மரணம்..!

இங்கிலாந்தில் வசித்து வரும் இரண்டு இலங்கையர்கள் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு …