Breaking News
Home / latest-update / கொரானாவிலிருந்து தப்பித்துக் கொண்ட சீனா..!! சர்வதேச நாடுகளுக்கு காத்திருக்கும் ஆபத்து..!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

கொரானாவிலிருந்து தப்பித்துக் கொண்ட சீனா..!! சர்வதேச நாடுகளுக்கு காத்திருக்கும் ஆபத்து..!!

சீனாவில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி பலியாகிக் கொண்டிருப்பதவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டிருப்பதாகவும், தொற்றுக்குள்ளாகும் மக்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டிருப்பதாகவும் சீன ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா தொடர்பில் ஆரம்பத்தில் மருத்துவர்கள் எச்சரித்திருந்தாலும், அந்நாட்டு அரசாங்கம் அசமந்தப் போக்கிலிருந்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அடுத்தடுத்து நான்கு முறை எச்சரிக்கை செய்யப்பட்டும் சீன அரசாங்கம் அதனை கண்டுகொள்ளவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன.இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களில் சீனாவில் மட்டும் 3000 இற்கும் அதிகளவான பொது மக்கள் பலியாகியிருக்கிறார்கள். அது மாத்திரமல்லாது கொரோனா தொற்றானது 30 நாடுகளுக்குப் பரவியிருப்பதுடன், இத்தாலி, தென்கொரியா, ஈரான் என்று அடுத்தடுத்த நாடுகளுக்கும் பரவத் தொடங்கியிருக்கிறது.

இந்த நிலையில் தான் சீனாவில் கொரோனாவினால் பலியாகிக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கியிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
குறிப்பாக நேற்றைய தினம் மட்டும், சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் 29 பேர் உயிரிழந்தனர். ஜனவரி மாதத்திற்கு பிறகு இறப்பு விகிதம் இப்போதுதான் இந்த அளவிற்கு குறைந்துள்ளதாகவும், இத் துயரத்திலிருந்து முழுமையாக மீள முடியும் என்றும் சீன அதிகாரிகளும், மருத்துவர்களும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஆனாலும், வேறு நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவுவதனால் உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இதற்கிடையில், சுவிஸர்லாந்திலும் கொரோனாவின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், கொரோனா வைரஸிற்கு இதுவரை எந்தவிதமான மருந்துகளையும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் மாலை 6.20 இற்கு வெளியான விசேட செய்தி……!

கொரோனா வைரஸை இல்லாதொழிக்கும் நோக்கில் கண்டி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு மீள் அறிவித்தல் …