Breaking News
Home / latest-update / ரயிலில் மோதி பரிதாபமாகப் பலியான குடும்பஸ்தர்..! வாழைச் சேனையில் சோகம்..!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

ரயிலில் மோதி பரிதாபமாகப் பலியான குடும்பஸ்தர்..! வாழைச் சேனையில் சோகம்..!

புகையிரத வண்டியில் மோதுண்டு நபரொருவர் பலியான சம்பவமொன்று நேற்று முன்தினம் இரவு (25) இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட இரவு நேர புகையிரத வண்டி வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி மஜ்மா நகர் பகுதியால் பயணிக்கும் போது இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவத்தில் மரணமடைந்தவர் பொலன்நறுவையை பிறப்பிடமாகவும் நாவலடியில் வசிப்பிடமாகவும் கொண்ட நான்கு பிள்ளைகளின் தந்தையான எம்.அனீஸ் (வயது 25) என தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.மரணமடைந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக தற்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

கடந்த 24 மணிநேரத்தில் 1,400 பேர் பலி..! அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்தும் கொரோனா..!

கடந்த 24 மணித்தியாலத்தில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் காரணமாக 1,400 பேர் மரணித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுவரையில் …