Breaking News
Home / latest-update / கோப்ரா படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

கோப்ரா படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’கோப்ரா’ படத்தை இயக்கி வருகிறார். விக்ரம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.



இப்படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார். ஆக்‌ஷன், திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது.

இந்நிலையில், கோப்ரா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிப்ரவரி 28ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது

கோப்ரா







Check Also

மருந்துகளை அனுப்பாவிட்டால் தக்க பதிலடி இந்தியாவுக்கு கொடுக்கப்படலாம்- ட்ரம்ப்

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிவரும் நிலையில் இந்தியாவிடம் இருந்து கொள்வனவுக்காக பதிசெய்யப்பட்ட மருந்துகளை அனுப்பவில்லை என்றால் தக்க பதிலடி …