Breaking News
Home / latest-update / தற்கொலை செய்ய தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் சிறுவன்- நெஞ்சை உலுக்கும் வீடியோ
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

தற்கொலை செய்ய தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் சிறுவன்- நெஞ்சை உலுக்கும் வீடியோ

தற்கொலை செய்ய தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் சிறுவன்- நெஞ்சை உலுக்கும் வீடியோ

தற்கொலை செய்ய தாயிடம் தூக்கு கயிறு கேடு கதறும் சிறுவன்

கான்பெர்ரா :

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரை சேர்ந்த பெண் யர்ராகா பேல்ஸ். இவரது 9 வயது மகன் குவாடன், மரபணு நோயால் பாதிக்கப்பட்டு உடல் வளர்ச்சி குன்றி காணப்படுகிறான். அவலமான தோற்றம் காரணமாக குவாடனை, பள்ளியில் சக மாணவர்கள் தொடர்ந்து கேலி, கிண்டல் செய்து வருகின்றனர். இதனால் அவன் மிகவும் மனமுடைந்து போனான்.

இது குறித்து தனது தாயிடம் கூறி கதறி அழுத குவாடன், தனக்கு வாழ்வதற்கே பிடிக்கவில்லை என்றும் தற்கொலை செய்து கொள்ள தூக்குகயிறு அல்லது கத்தி போன்ற ஏதாவது ஆயுதம் தரும்படி கேட்டு மன்றாடினான்.

மகனின் கதறலையும், கண்ணீரையும் பார்த்து உடைந்துபோன யர்ராகா, மற்றவர்களை கேலி-கிண்டல் செய்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்து உலகிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், தன் மகன் குவாடன் தற்கொலை செய்வதாக கூறி கதறி அழுத காட்சிகளை செல்போனில் வீடியோ எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டார்.

Check Also

கடந்த 24 மணிநேரத்தில் 1,400 பேர் பலி..! அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்தும் கொரோனா..!

கடந்த 24 மணித்தியாலத்தில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் காரணமாக 1,400 பேர் மரணித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுவரையில் …