Breaking News
Home / latest-update / இந்தியாவிற்குள் நுழைந்தது அமெரிக்க ஜனாதிபதியின் படைப் பரிவாரங்கள்!! அதிபர் ட்ரம்பின் மிரள வைக்கும் வருகை..!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

இந்தியாவிற்குள் நுழைந்தது அமெரிக்க ஜனாதிபதியின் படைப் பரிவாரங்கள்!! அதிபர் ட்ரம்பின் மிரள வைக்கும் வருகை..!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் 24,25ம் திகதிகளில் இந்தியாவுக்கு இரு நாட்கள் பயணம் மேற்கொள்கிறார்.

முதலில் குஜராத் மாநிலத்துக்குச் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதன்பின் டெல்லி வந்து அமெரிக்கா புறப்படுகிறார். அமெரிக்க ஜனாதிபதியின் வருகைக்காக அகமதாபாத் நகரம் அழகுபடுத்தப்பட்டு வருவதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.ட்ரம்பின் வருகைக்கு முன்னர் அவருக்கான பாதுகாப்பு பரிவாரங்கள் இந்தியாவிற்குள் நுழைந்துவிட்டன. ஹெலிகொப்டர் உட்பட அவர் பயன்படுத்தும் கார் என அனைத்தும் இந்தியாவிற்குள் வந்து இறங்கிவிட்டன.இந்நிலையில் ட்ரம்ப் பயன்படுத்தும் பீஸ்ட் காரின் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.அமெரிக்க ஜனாதிபதி பயன்படுத்தும் தி பீஸ்ட் வகைக் காரின் கதவுகளில் சாவி நுழைப்பதற்கான எந்தவிதமான துளையும் இருக்காது.துப்பாக்கிக் குண்டுகள் துளைக்காத வகையில் ஜன்னல் கண்ணாடிகள் 5 இஞ்ச் கணத்தால் 5 அடுக்குகளால் பாலி-கார்பனேட்டால் செய்யப்பட்டவை.கார் ஓட்டுநரின் தனது கண்ணாடியை 3 இன்ஞ்சுக்கு மேல் இறக்க முடியாத அளவுக்கு வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.காருக்குள் அமர்ந்துவிட்டால் ஒட்டுமொத்தமாக கார் சீல் செய்யப்பட்டுவிடும். கார் மீது ஏவுகணைத் தாக்குதல், துப்பாக்கிச்சூடு, ரசாயன ஆயுதங்கள் மூலம் தாக்குதல் என எதன் மூலமும் தாக்குதல் நடத்த முடியாது.அதிபருக்கு அவசர நேரத்தில் அளிக்க ஆக்ஸிஜன் டேங், அதிபரின் ரத்த பிரிவைச் சேர்ந்த ரத்த மாதிரிகள், முதலுதவி பொருட்கள் இருக்கும்.காரின் ஆயில் , பெட்ரோல் டேங்கர் எந்த தாக்குதலுக்கும் உருக்குலையாத வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.இரவு நேரத்தில் காரின் விளக்குகளை ஆன்-செய்யாமல் காரை ஓட்டும் வகையில் நைட்-விஷன் சிறப்பு அம்சம் இருக்கிறது
காருக்குள் இருந்து கொண்டே வெளியில் இருக்கும் எதிரிகள் மீது துப்பாக்கியால் சுடமுடியும், கண்ணீர்ப் புகைக்குண்டு வீச முடியும்.காரின் கதவுகள் 20 செ.மீ கனமுள்ள அலுமினியம்,டைட்டானியம், ஸ்டீல் ஆகிய உலோகத்தால் செய்யப்பட்டவைடாங்கிகளை வீழ்த்தும் ராக்கெட் லாஞ்சர்கள், கண்ணி வெடி ஆகியவற்றின் மூலம் காருக்கு எந்த சேதமும் விளைவிக்க முடியாது.
காரில் உள்ள சென்சார் மூலம் நியூக்கிளியர், கெமிக்கல் மற்றும் பயாலஜிக்கல் தாக்குதல்களையும் எளிதாக கண்டறிந்துவிடலாம்.இந்த காருக்கான டயர்களை குட்இயர் நிறுவனம் தயாரிக்கிறது. பெரும் டிரகக்குகளுக்கு பயன்படுத்தப்படும் டயர்களுக்கான வலிமையை இந்த காருக்கான டயருக்கு வழங்குகிறது. ஒரு சிறிய டிரக் போன்ற வடிவத்தில், எடையில் உலகிலேயே உருவாக்கப்பட்ட ஒரே கார் தி பீஸ்ட் வகைக்கார்தான்.வழக்கமாக இரு பீஸ்ட் கார்கள் அதிபர் அணிவகுப்பில் செல்லும் எந்த காரில் அதிபர் செல்கிறார் என யாருக்கும் தெரியாது.அமெரிக்க சீக்ரெட் சர்வீஸ் என்ற அமைப்பால் ஓட்டுநருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு சவாலான சூழ்நிலைகளிலும் திறமையாகச் செயல்பட முடியும், தப்புவது குறித்து பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.சாட்டிலைட் ஃபோன் காரில் இருப்பதால், எந்த நாட்டின் அதிபருடனும், அமெரிக்கத் துணை அதிபர் மற்றும் பென்டகனுக்கு காரில் இருந்தவாறு பேசலாம்.காரில் மொத்தம் 7 பேர் அமரலாம். அதிபருடன் 4 பேர் மட்டுமே அமர முடியும். ஓட்டுநருக்கும், அதிபர் இருக்கைக்கும் இடையே இருக்கும் கண்ணாடி தடுப்பை, அதிபரால் மட்டுமே திறக்க முடியும்.

Check Also

கடந்த 24 மணிநேரத்தில் 1,400 பேர் பலி..! அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்தும் கொரோனா..!

கடந்த 24 மணித்தியாலத்தில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் காரணமாக 1,400 பேர் மரணித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுவரையில் …