Breaking News
Home / latest-update / பால்கோவா மாதிரி இருக்கீங்க.. நெருக்கி செய்வோம்..! “#Friendship” குறித்து ஹர்பஜன்.!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

பால்கோவா மாதிரி இருக்கீங்க.. நெருக்கி செய்வோம்..! “#Friendship” குறித்து ஹர்பஜன்.!

பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் முதன்முறையாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கி இருக்கின்றார். ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இயக்கத்தில் உருவாக்கி வரும் “பிரண்ட்ஷிப்” என்ற திரைப்படத்தில் தான் அவர் நடிக்க இருக்கின்றார்.

சினிமாஸ் ஸ்டுடியோஸ் & ஷேண்டோ ஸ்டுடியோ தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் லாஸ்லியா கதா நாயகியாக அறிமுகமாகி இருக்கின்றார். எதிர்பார்ப்புகளை அதிகரிக்கும் வண்ணம் பல பிரபலங்கள் அடுத்தடுத்து இந்த படத்தில் கம்மிட் ஆகுவதாக அறிவிப்புகள் வெளியாகின்றன.

அந்த வகையில் தற்போது ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கின்றது. எனவே படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்து இருக்கின்றது.

இந்நிலையில், இதில் காமெடிக்காக நடிகர் சதிஷ் இணைந்துள்ளார். இதுகுறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் ஹர்பஜன் சிங், ” புது மாப்பிள்ளை @actorsathish எப்பிடி இருக்கீங்க.தம்பி நல்லா சிரிச்ச முகம்.பாக்க அப்பிடியே ஸ்ரீவல்லிபுத்தூர் பால்கோவா மாதிரி இருக்கீங்க.படத்துல காமெடி கொஞ்சம் தூக்கலா இருக்கட்டும்.நல்லா நெருக்கி செய்வோம் #Friendship ” என்று தெரிவித்துள்ளார்.

Check Also

கடந்த 24 மணிநேரத்தில் 1,400 பேர் பலி..! அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்தும் கொரோனா..!

கடந்த 24 மணித்தியாலத்தில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் காரணமாக 1,400 பேர் மரணித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுவரையில் …