Breaking News
Home / latest-update / Pen drive I Shortcut Virus தாக்கியிருந்தால்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

Pen drive I Shortcut Virus தாக்கியிருந்தால்

கணினி வைரஸ்களை அழித்தொழிக்கும் எழுத்துக்கள்..

கணனி பாவனையின்போது தொல்லை தரும் விடயமாக இன்று கணனி வைரஸ்கள் அமைந்துள்ளன. அவற்றை நீக்குவதற்கு எமக்கு வைரஸ் தாக்கிகள் கொள்வனவு செய்ய பணவிரயமாகின்றது மாத்திரமின்றி கால விரயமும் ஆகின்றது.
குறிப்பாக இன்றைய காலத்தில் அதிகம் பிரபல்யமாக உள்ள வைரஸ்களில் Shortcut Virus முக்கிய இடம்வகிக்கின்றது. இதன் தாக்கம் pen drives களில் மட்டுமல்லாமல் sticks, phone memories, external hard disks களிலும் காணப்படுவதனை நாம் காண்கின்றோம்.
நாம் இதனால் தாக்கப்பட்டுள்ள கோப்பை (Folder) ஐ திறக்க முயன்றால் “Shortcut missing…!” எனும் தகவல் எமக்குத் தென்படும். இதனால் நாம் சேமித்து வைத்த கோப்புக்கள், தகவல்கள் அனைத்தையும் நாம் இழந்து விட்டதாக எண்ணுவோம். உண்மை அவ்வாறல்ல. அவைபாதுகாப்பாகவே இருக்கின்றன.
இவ்வாறான வைரஸ்களை நீக்குவதற்கு வைரஸ் காடின் துணையின்றி பின்வரும் முறையினைப் பயன்படுத்த முடியும்.
Pen drive I Shortcut Virus தாக்கியிருந்தால் மேலுள்ளதைப் போன்று கோப்புக்கள் (Folders) காட்சியளிக்கும். அவ்வாறாயின் பின்வரும் முறையினைக் கையாண்டு உங்கள் வைரஸ்களை நீக்கிக் கொள்ளுங்கள்.

1. வைரஸால் தாக்கப்பட்ட drive ஐ கணனியுடன் தொடர்பு படுத்திய பின்னர Win key + R எனும் இரண்டு பொத்தான்களையும் அழுத்துங்கள். அப்போது Run box திறக்கும் அதில் “cmd” ” என தட்டச்சிட்டு Enter பண்ணுங்கள். (மேற்கோற்குறி இல்லாமல்)
2 .பின்னர் உங்களது drive இன் பெயரை எழுதி Enter ஐ அழுத்துங்கள் உதாரணம் g: (உங்களது Drive இன் பெயரை “My Computer” இல் பார்த்துக் கொள்ள முடியும்.)
3.பின்னர் பின்வருமாறு தட்டச்சிட்டு Enter செய்யுங்கள். “del *.lnk” ;. (மேற்கோற்குறி இல்லாமல்)
4.கடைசியில் பின்வரும் Command type செய்யுங்கள். (without double quotes)
“attrib -s -r -h *.* /s /d /l”
அவ்வளவுதான் சில வினாடிகள் காத்திருங்கள். பின்னர் உங்கள் Drive ஐ திறந்து பாருங்கள். உங்கள் கோப்புக்கள் அனைத்தும் இருப்பதைக் காண்பீர்கள். உங்கள் பிரச்சினை முடிவுற்றது.
குறிப்பு: உங்கள் கணனியில் அனைத்துவிதமான வைரஸ்களையும் அழிப்பதாயின் நீங்கள் சிறந்த வைரஸ் காட் மென் பொருள் ஒன்றை install செய்வதானது வரவேற்கத்தக்கது.

Check Also

கொவிட் 19 காரணமாக இலங்கையின் ஆறாவது மரணம்..!

இலங்கையில் கொவிட்ட 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஆறாவது நபர் உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்கள பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். …