Breaking News
Home / latest-update / யாழ்ப்பாணக் கடற்பரப்பில் திடீர் சுற்றி வளைப்பு..100 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்துடன் இருவர் அதிரடியாக கைது!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

யாழ்ப்பாணக் கடற்பரப்பில் திடீர் சுற்றி வளைப்பு..100 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்துடன் இருவர் அதிரடியாக கைது!!

சுமார் 100 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் யாழ்ப்பாண, மாதகல் கடல் பிரதேசத்தில் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

கடத்திச் செல்லப்பட்ட நிலையிலேயே இந்த தங்கம் மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.மீட்கப்பட்ட தங்கத்தின் நிறை 14.35 கிலோகிராம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைதாவர்களிடமிருந்து சுமார் 137 மில்லியன் (13 கோடியே 70 லட்சம் ரூபா) பெறுமதியான தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கடற்படையினருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்து நேற்று மாலை மாதகல் கடற்பரப்பில் பயணித்த டிங்கி படகு ஒன்று சோதனைக்குட்படுத்திய போதே, 14 கிலோ 300 கிராம் தங்கக் கட்டிகள் கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளன.சம்பவம் தொடர்பில் மாதகலைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும், கைதானவர்களும், மீட்கப்பட்ட தங்கக் கட்டிகளும் யாழ்ப்பாணம் சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் யார் என்ற விடயத்தை கடற்படையினர் இன்னும் வெளியிடவில்லை.

Check Also

கொவிட் 19 காரணமாக இலங்கையின் ஆறாவது மரணம்..!

இலங்கையில் கொவிட்ட 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஆறாவது நபர் உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்கள பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். …