Breaking News
Home / latest-update / அதிகாலையில் வீடு புகுந்த திருடர்கள் வயோதிப தம்பதியை தாக்கி கொள்ளை..!! யாழில் இன்று அதிகாலை நடந்த பயங்கரம்..!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

அதிகாலையில் வீடு புகுந்த திருடர்கள் வயோதிப தம்பதியை தாக்கி கொள்ளை..!! யாழில் இன்று அதிகாலை நடந்த பயங்கரம்..!!

சக்கர நாற்காலியில் நடமாடும் முதியவரையும், அவரது மனைவியையும் கொடூரமாக தாக்கி வீட்டிலிருந்த நகை, பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.கோப்பாய் பகுதியில் இன்று (13) அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.சக்கர நாற்காலியில் நடமாடும் முதியவரும், அவரது வயோதிக மனைவியும் தனித்திருந்த வீட்டில் கொள்ளையர் கும்பல் ஒன்று இன்று அதிகாலை நுழைந்துள்ளது. சக்கர நாற்காலியில் நடமாடும் முதியவரின் தலையில் கொட்டனால் தாக்கியதில் அவர் தற்போது பேச முடியாத நிலையில் உள்ளார். மூதாட்டி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அவரது பற்கள் உடைந்ததுடன், முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இருவரும் பேச முடியாமலுள்ளதால் கொள்ளையிடப்பட்ட பொருட்கள் பற்றிய துல்லியமான விபரங்கள் பெறப்படுவதில் சிக்கல் உள்ளது. எனினும், ஐந்து கொள்ளையர்கள் வந்ததாக அவர்கள் சைகை மூலம் தெரிவித்துள்ளனர்.வயோதிப தம்பதிகளின் பிள்ளைகள் வெளிநாட்டில் இருக்கும் நிலையில், மகளொருவர் இலங்கைக்கு வந்து ஓரிரு தினங்களின் முன்னர்தான் திரும்பிச் சென்றுள்ளார். இதனை அறிந்தே கொள்ளையர்கள் அந்த வீட்டை குறிவைத்திருக்கலாமென கருதப்படுகிறது.கோப்பாய் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Check Also

ஐ.பி.எல் தாெடருக்கான அட்டவணை வெளியீடு!

இந்த வருடத்துக்கான ஐ.பி.எல் தாெடருக்கான நேர அட்டவணைகள் உத்தியோகபூர்வமாக வெளியாகியுள்ளன. இதன்படி முதலாவது போட்டி மார்ச் மாதம் 29ம் திகதி …