Breaking News
Home / latest-update / இலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணியில் போக்ஸ், ஜென்னிங்ஸ்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

இலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணியில் போக்ஸ், ஜென்னிங்ஸ்

இலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணியில் போக்ஸ், ஜென்னிங்ஸ்

பென் போக்ஸ், ஜென்னிங்ஸ்
இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடர் மார்ச் 19-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது.

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன பென் போக்ஸ், பேட்ஸ்மேனான ஜென்னிங்ஸ் ஆகியோர் 12 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அணியில் இடம் கிடைத்துள்ளது. தென்ஆப்பிரிக்கா தொடரின்போது காயம் அடைந்த ஆண்டர்சன், ஆர்சர் குறித்து பரிசீலிக்கப்படவில்லை.

இலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. ஜோ ரூட், 2. டொமினிக் பெஸ், 3. ஸ்டூவர்ட் பிராட், 4. ஜோஸ் பட்லர், 5. கிராவ்லி, 6. சாம் கர்ரன், 7. ஜோ டென்லி, 8. பென் போக்ஸ், 9. ஜென்னிங்ஸ், 10, ஜேக் லீச், 11. மேத்யூ பார்கின்சன், 12. ஒல்லி போப், 13. சிப்லி, 14. பென் ஸ்டோக்ஸ், 15. கிறிஸ் வோக்ஸ், 16. மார்க் வுட்.

Check Also

ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய வங்கிகள் இயங்குகிறதா – ஆராய்கிறது மத்திய வங்கி

கொரோனா வைரஸ் பரவலால் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ள பொது மக்களுக்காக அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள வங்கி சலுகைகள் செயற்படுத்தப்படுகிறதா என்பது தொடர்பில் இலங்கை …