Breaking News
Home / latest-update / தன்னைத் தானே வெட்டி உயிரை மாய்த்த நபர்.. கொழும்பில் நடந்த பயங்கரம்.!! உயிரை மாய்த்த நபர்.. கொழும்பில் நடந்த பயங்கரம்.!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

தன்னைத் தானே வெட்டி உயிரை மாய்த்த நபர்.. கொழும்பில் நடந்த பயங்கரம்.!! உயிரை மாய்த்த நபர்.. கொழும்பில் நடந்த பயங்கரம்.!!

தெஹிவளையில் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.நேற்று இரவு 11 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீடு ஒன்றுக்கு முன்னால் இருந்த வீதியில் கிடந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த நபர் தனது மனைவியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தன்னை தானே கத்தியால் குத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.உயிரிழந்தவர் 35 வயதுடைய தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்தவராகும். உயிரிழந்தவரின் சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Check Also

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இளவரசி மரியா தெரசா பலி

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஸ்பெயின் அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசி மரியா தெரசா உயிரிழந்தார். சீனாவில் உருவான கொரோனா …