Breaking News
Home / latest-update / யாழ் நகர விடுதி சுற்றிவளைப்பில் குழந்தையுடன் சிக்கிய இளம் தாய்..!! வெளியான முக்கிய தகவல்..!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

யாழ் நகர விடுதி சுற்றிவளைப்பில் குழந்தையுடன் சிக்கிய இளம் தாய்..!! வெளியான முக்கிய தகவல்..!

யாழ்.நகருக்குள் நேற்றையதினம் சுற்றிவளைக்கப்பட்ட விடுதியிலிருந்து 17 வயதான சிறுமியும் அவருடைய பச்சிளம் குழந்தையுமே மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

யாழ்.மாநகரசபையின் பதிவு இல்லாமல் இயங்கிய குறித்த விடுதி சுற்றி வளைக்கப்பட்டபோது அங்கிருந்த பலா் தப்பி ஓடியிருந்த நிலையில் ஒரு பெண்ணும், ஆணும் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.இந்நிலையில், கைதான பெண் 17 வயதான சிறுமி எனவும், திருமணமாகாத அவாிடம் பச்சிளம் குழந்தை ஒன்று இருந்த நிலையில் தற்போது இருவரும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக யாழ்.பிரதேச செயலக அதிகாாிகள் கூறியிருக்கின்றனா்.

மேலும், சிறுமியின் கணவா் என ஒருவா் தன்னை அடையாளப்படுத்திய நபர் ஒருவரும் தற்போது பொலிஸாாிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளாா்.யாழ்ப்பாணம் கோயில் வீதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றுடன் இணைந்து குறித்த விடுதியும் இயங்கி வந்துள்ளது.எனினும், அந்த விடுதி பதிவு செய்யப்படவில்லை என்பதுடன் அந்த விடுதியில் கலாசார சீரழிவு இடம்பெறுவதாக யாழ்ப்பாணம் பிரதேச செயலக கலாசார பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.அதுதொடர்பில் யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ்.சுதர்சன் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் பொலிஸாா் இணைந்து நேற்றையதினம் விடுதியை சுற்றிவளைத்துள்ளனா்.இதன்போது கைது செய்யப்பட்ட இருவரும் ஒரே இடத்தைச் சேர்ந்த போதும் குறித்த பெண் திருமண வயதையடையாதால், இருவருக்கும் பதிவுத் திருமணம் செய்து வைக்க முடியாத காரணத்தால் இருவரும் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை யாழ் மாநகர சபை பதிவு செய்யப்படாத விடுதிகளை இயங்க அனுமதித்ததன் காரணமாகவே இவ்வாறான கலாசார சீரழிவுகள் இடம்பெற வழிவகுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

ஐ.பி.எல் தாெடருக்கான அட்டவணை வெளியீடு!

இந்த வருடத்துக்கான ஐ.பி.எல் தாெடருக்கான நேர அட்டவணைகள் உத்தியோகபூர்வமாக வெளியாகியுள்ளன. இதன்படி முதலாவது போட்டி மார்ச் மாதம் 29ம் திகதி …