Breaking News
Home / latest-update / சிறுமியை சீரழித்து முகநூலில் மிரட்டிய யாழ் இளைஞன் அதிரடியாகக் கைது..!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

சிறுமியை சீரழித்து முகநூலில் மிரட்டிய யாழ் இளைஞன் அதிரடியாகக் கைது..!

பதின்ம வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதுடன், அந்தரங்க படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றுவேன் என அச்சுறுத்தல் விடுத்த இளைஞன் ஒருவனை மானிப்பாய் பொலிசார் மடக்கிப் பிடித்துள்ளனர்.

வலி தென்மேற்கு பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரே துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். சிறுமியை காதலிப்பதாக கூறி இளைஞர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்றும், அவர்களிடையே ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து விடயத்தை வெளியில் சொன்னால், அந்தரங்கப் படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றுவேன் என்றும் அவர் அச்சுறுத்திதயாகவும் கூறப்படுகிறது.இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் மேற்கொண்ட முறைப்பாட்டையடுத்து, இளைஞன் மடக்கிப் பிடிக்கப்பட்டான்.சிறுமி மேலதிக பரிசோதனைகளிற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதும், இளைஞனை நீதிமன்றத்தில் முற்படுத்தும் நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

Check Also

ஐ.பி.எல் தாெடருக்கான அட்டவணை வெளியீடு!

இந்த வருடத்துக்கான ஐ.பி.எல் தாெடருக்கான நேர அட்டவணைகள் உத்தியோகபூர்வமாக வெளியாகியுள்ளன. இதன்படி முதலாவது போட்டி மார்ச் மாதம் 29ம் திகதி …