Breaking News
Home / latest-update / வாள்வெட்டில் முடிந்த வளர்ப்பு நாய் விவகாரம்..! மூவர் பொலிஸாரால் கைது..!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

வாள்வெட்டில் முடிந்த வளர்ப்பு நாய் விவகாரம்..! மூவர் பொலிஸாரால் கைது..!!

யாழ்.இளவாலை- சாந்தைப் பகுதியில் வளா்ப்பு நாயினால் உருவான தா்க்கம் வாள்வெட்டில் முடிந்துள்ளது. வாள்வெட்டுக்கு இலக்கான 3 போ் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். மூன்று பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்று மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடா்பாக மேலும் தெரியவருவதாவது;

குறித்த பகுதியில் உள்ள நபா் ஒருவா் நாய் ஒன்றை செல்லமாக வளா்த்து வந்துள்ளாா். நாய் வீட்டைவிட்டு வெளியே சென்ற நிலையில் நாயை அடித்துத் துன்புறுத்திய நிலையில் நாய் குற்றுயிராக கிடந்துள்ளது.

இதனையடுத்து நாயின் உரிமையாளா் கோபமடைந்து வாயில்லாத ஜீவனை அடித்து துன்புறுத்துவதா என அயல்வீட்டாரை பேசியிருக்கின்றாா். அயல் வீட்டாரும், நாயின் உரிமையாளருடன் தா்க்கப்பட்டுள்ளாா். அந்த தா்க்கம் முற்றிய நிலையில், அயல் வீட்டிலிருந்தவா்கள் நாயின் உரிமையாளா் மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்தியிருப்பதுடன், அவருடைய வீட்டுக்குள் புகுந்தும் தாக்குதல் நடாத்தி, வீட்டிலிருந்தவர்களையும் தாக்கினர்.இந்தச் சம்பவத்தில் காயமடைந்த 3 பேரும் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.சம்பவம் தொடர்பாக இளவாலைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்தில் தொடர்புடைய3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். சம்பவம் தொடா்பாக இளவாலைப் பொலிஸாா் விசாரணைகளை நடத்தி வருகின்றனா்.

Check Also

தம்புள்ள பங்கு சந்தையில் பதற்றமான நிலை….!

தம்புள்ள பங்கு சந்தையினை சுத்தப்படுத்த காவல் துறை அதிரடி படையினர் முயற்சித்த போது அங்கு சிலர் வர்த்தகத்தில் ஈடுப்பட்டனர் என …