Breaking News
Home / latest-update / உலகை வேகமாக அச்சுறுத்தும் கொரோனாவிற்கு இதுவரை 908 பேர் பரிதாபமாகப் பலி..!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

உலகை வேகமாக அச்சுறுத்தும் கொரோனாவிற்கு இதுவரை 908 பேர் பரிதாபமாகப் பலி..!!

உலகை அச்சுறுத்தி வரும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உலகளவில் 908ஆக அதிகரித்துள்ளது.

இதில், சீனாவில் மட்டும் 900 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன்மூலம் 2003ல் சார்ஸ் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைவிட இதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் ஹுபே மாகாணத்தில் மட்டும் 871 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.இந்த கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதற்கான அறிகுறிகளுடன் 40,000க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில், ஹுபே மாகாணத்தில் மட்டும் 29,631 பேரும் குறிப்பாக வூஹான் நகரில் 16,902 பேரும் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.மேலும், நோய் தொற்று காரணமாக 22,160 பேர் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மொத்தம் 73,127 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். இதில் 6,484 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதேவேளை, சீனாவில் மட்டும் இதுவரை சுமார் 3,281 பேர் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என சீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இதேவேளை, உலகம் முழுவதும் 25 நாடுகளில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவின் ஹுபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அவா்களிடம் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில், இதுவரை அறியப்படாத புதிய வைரஸ் மூலம் அந்தக் காய்ச்சல் ஏற்படுவது கண்டறியப்பட்டது. ‘சார்ஸ்’ வைரஸின் 70 சதவீதத் தன்மையைக் கொண்ட அந்த வைரஸ் ‘கொரோனா’ வகையைச் சோ்ந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.இந்த புதிய ‘கொரோனா’ வைரஸ் தனது தன்மையையும் வடிவத்தையையும் தாமாகவே மாற்றிக்கொண்டு இன்னும் வேகமாகப் பரவும் அபாயம் உள்ளது. இந்த வைரஸ் நோய் மேலும், பரவுவதைத் தடுப்பதற்காக சீனாவிலும் உலகின் பிற நாடுகளிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

கடந்த 24 மணிநேரத்தில் 1,400 பேர் பலி..! அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்தும் கொரோனா..!

கடந்த 24 மணித்தியாலத்தில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் காரணமாக 1,400 பேர் மரணித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுவரையில் …