யாழ்ப்பாணம் கோப்பாய் தெற்கு காளிகோவில் பிரதேசத்தில் வீடொன்றில் வயது முதிர்ந்த ஒருவர் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் சடலமாக நேற்று மீட்கப்பட்டுள்ளதாக
கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோப்பாய் தெற்கைச் சேர்ந்த 64 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தையான ஞானமுத்து ஞானையா என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டார்.
குறித்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவரது மரணம் தொடர்பான விசாரணைகளை கோப்பாய் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.










