Breaking News
Home / latest-update / விக்கி தலைமையில் உருவானது – “தமிழ் மக்கள் தேசிய கூட்டணி”
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

விக்கி தலைமையில் உருவானது – “தமிழ் மக்கள் தேசிய கூட்டணி”

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் உருவாகும் புதிய கூட்டணியான “தமிழ் மக்கள் தேசிய கூட்டணி” புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று(09) யாழ்ப்பாணம் -ரில்கோ விருந்தினர் விடுதியில் கைச்சாத்திடப்பட்டது.

கூட்டணி அமைப்பதில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையிலான சுப நேரத்திலேயே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இதற்கமைய தமிழ் மக்கள் கூட்டணி, ஈபிஆர்எல்எப், ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம் மற்றும் தமிழ் தேசியக் கட்சி ஆகிய நான்கு கட்சிகளுக்கிடையே இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.

Check Also

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இளவரசி மரியா தெரசா பலி

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஸ்பெயின் அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசி மரியா தெரசா உயிரிழந்தார். சீனாவில் உருவான கொரோனா …