தின பலன் ஆகஸ்டு 19 2012

மேஷம்
திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் மகிழ்ச்சியுண்டு. நட்பு வட்டாரம் விரியும். குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசுக் காரியங்களில் இருந்து வந்த தடைகள் விலகும். வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, நீலம்

ரிஷபம்
இன்று கையில் காசுபணம் புரளும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். உடன்பிறந்தவர் களின் நீண்டநாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபார ரீதியாக சிலரை சந்திப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் சந்திப்பு நிகழும். அடிக்கடி செலவு வைத்த வாகனம் இனி சீராகும். பெற்றோரின் ஆதரவு கிட்டும். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, கிரே

மிதுனம்
வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். குடும்பாத்தாருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். தாயின் உடல்நிலைசீராக இருக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. எதிர்பார்த்தபடி உதவிகள் கிடைக்கும். அம்மாவின் உடல்நிலை சீராகும். மறைமுக போட்டிகளை வெல்வீர்கள். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிக்கப் படுவீர்கள். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், கிளிப் பச்சை

கடகம்
முகப்பொ‌லிவுடன் காணப்படுவீர்கள். முடியாமல் போன சில காரியங்களை இன்று முடிப்பீர்கள். உத்தியோகத்தில் சகஊழியர்களின் ஆதரவு கிட்டும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கண் எரிச்சல், தூக்கமின்மை விலகும். பழைய நண்பர்களின் சந்திப்பு நிகழும். பிள்ளைகளின் எண்ணங்களைக் கேட்டறிவீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு கிட்டும். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே, மெரூண்

சிம்மம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பிக் கொண்டிருக்காதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். உத்தியோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : வெளிர் மஞ்சள், ப்ரவுன்

கன்னி
குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். பேச்சில் காரம் வேண்டாம். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். லேசாக தலை வலி, வயிற்று வலி வந்து நீங்கும். அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட எண்8 அதிர்ஷ்ட நிறங்கள் : மிண்ட்கிரே, சிவப்பு

துலாம்
உங்களின் வெளிப்படையான பேச்சை அனைவரும் ரசிப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியிடம் அனுசரித்துப் போ‌வீர்கள். புதிய எண்ணங்கள் மனதில் தோன்றும். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : வைலெட், வெளிர் நீலம்

விருச்சிகம்
இன்று மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். கணவன் – மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். அவர்களின் உடல் நிலை சீராக அமையும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களைச் சந்திப்பீர்கள். வீட்டை அலங்கரிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் ஆதரவு உண்டு. அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், பிங்க்

தனுசு
பரபரப்புடன் காணப்பட்ட நீங்கள் இன்று குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். அவர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். வியாபார ரீதியாக பிரபலங்களைச் சந்திப்பீர்கள். தலைவலி, இடுப்பு வலி நீங்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அனபுத்தொல்லைகள் விலகும். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள். கோபம் நீங்கும். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆலிவ் பச்சை, வெள்ளை

மகரம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : அடர் சிவப்பு, இளம்மஞ்சள்

கும்பம்
முகமலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த சிக்கலுக்கு முடிவு கட்டுவீர்கள். நீண்டநாள் ஆசைகளை பூர்த்தி செய்துக்கொள்வீர்கள். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு. தந்தையின் உடல்நிலை சீராக இருக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வாகனப்பழுது நீங்கும். வெளியூர் பயணங்களால் சந்தோஷமடைவிர்கள். உத்தியோகத்தில் மன உளைச்சல் விலகும். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : ஊதா, ரோஸ்

மீனம்
இன்று எதிர்ப்புகள், இழப்புகள், ஏமாற்றங்கள் நீங்கும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிப்பு மரியாதைக் கூடும். சகோதரர்கள் உதவுவார்கள். வியாபரத்தில் பாக்கிகளை விரைந்து வசூலிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பணிகளிலிருந்து வந்த தேக்க நிலை மாறும். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், கிரே

Special Recent Posts

உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் வரிசையில் சோனியா காந்தி 9-வது இடம்

உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் வரிசையில் சோனியா காந்தி 9-வது இடம்

May 24th, 2013

உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில் காங்கிரஸ் த[...]

இடதுசாரித் தீவிரவாதிகளிடம் பொலிசார் அதிரடி சோதனை

இடதுசாரித் தீவிரவாதிகளிடம் பொலிசார் அதிரடி சோதனை

May 24th, 2013

ஜேர்மனி அதிகாரிகள் ஒரே நாளில் பல ஊர்களில் இருந்த இடதுசாரித் தீவிரவாதிகளிடம் அதிரடி சோதனை நடத்தியுள்ள[...]

காதலிப்பவர் அளவுக்கு அதிகமாக சொந்தம் கொண்டாடுகிறார் என்பதற்கான அறிகுறிகள்!!!

காதலிப்பவர் அளவுக்கு அதிகமாக சொந்தம் கொண்டாடுகிறார் என்பதற்கான அறிகுறிகள்!!!

May 24th, 2013

காதல் அழியாமல் இருக்க வேண்டுமெனில் ஒருசிலவற்றை பின்பற்றி தான் ஆக வேண்டும். மேலும் ஒருசில கட்டுப்பாடு[...]

நட்ஸ் மில்க் ஷேக்

நட்ஸ் மில்க் ஷேக்

May 24th, 2013

கோடையில் நன்கு புத்துணர்ச்சியுடனும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டுமெனில், வீட்டில் எளிமையான முறையில்[...]

பொஸ்டன் குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு தொடர்புடைய நபர் சுட்டுக்கொலை

பொஸ்டன் குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு தொடர்புடைய நபர் சுட்டுக்கொலை

May 24th, 2013

பொஸ்டன் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடையவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக கூறப்பட்ட [...]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*