கொழும்பு வெள்ளவத்தையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சடலங்களாக மீட்பு!

இலங்கையின் தலைநகர் கொழும்பின் வெள்ளவத்தை – ராமகிருஷ்ணனன் வீதியில் டெரெஸ் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

வெள்ளவத்தையில் சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஹட்டன் கொட்டக்கலை டெரிக்கிளயர் தோட்டத்தை சேர்ந்த குமாரசாமி என்ற 60 வயதுடைய குடும்பஸ்தர் அவரது 56 வயதுடைய மனைவி பூபதி மற்றும் 23 வயதான மகள் அமிர்தப்பிரியா ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இச்சம்பவத்தில் மரணமானவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் றோஹன தெரிவித்துள்ளார்.

அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது கொலை செய்யப்பட்டார்களா? என்ற ரீதியில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஹட்டன் – கொட்டகலை பகுதியைச் சேர்ந்த அவர்கள் மூவரையும், குடும்பத்தின் மூத்த மகன் சில தினங்களுக்கு முன்னர் கொழும்புக்கு அழத்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வந்தததையடுத்து அயலவர்கள் பொலிஸாருக்கு தெரிவித்ததன் பின்னரே பொலிஸார் இச்சடலங்களை மீட்டுள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு நீதிமன்ற நீதிவான் விஜயம் செய்து பார்வையிட்டுள்ளதுடன், விசாரணை அதிகாரிகளும் அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

எனினும், அவர்களை அழைத்து வந்த மூத்த மகனின் தகவல்கள் எவையும் இதுவரை கிடைக்கவில்லை.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் நோக்கில் வெள்ளவத்தை பொலிஸாரும், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரும் அடங்கிய இரண்டு குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்க்துள்ளார்.

Special Recent Posts

மதுவினால் உண்டாகும் தலைபாரத்தை குறைக்கும் 9 எளிய வழிகள்!!!

மதுவினால் உண்டாகும் தலைபாரத்தை குறைக்கும் 9 எளிய வழிகள்!!!

May 22nd, 2013

மது அருந்துவது என்பது ஒரு இயல்பாகவே பல பேர் மத்தியில் ஆகிவிட்டது. அதனால் கிடைக்கும் ஆனந்தத்தை பற்றி [...]

சமையலறை குழாய் அடிக்கடி அடைக்குதா? அப்ப இத படிங்க…

சமையலறை குழாய் அடிக்கடி அடைக்குதா? அப்ப இத படிங்க...

May 22nd, 2013

வீட்டை சுத்தம் செய்ய ஆசைப்பட்டால், வீட்டின் அனைத்து இடங்களையும் சுத்தம் செய்ய வேண்டியிருக்கும். அவற்[...]

அனன்யா தமிழில் நடிக்க காரணம் இதுதான்…

அனன்யா தமிழில் நடிக்க காரணம் இதுதான்...

May 22nd, 2013

மீண்டும் தமிழில் நடிக்க வந்திருக்கிறார் திருமதி அனன்யா. டைட்டிலில் 'அனன்யா ஆஞ்சநேயலு' என்று போடுவ[...]

குளிர்பானத்துடன் மயக்க மருந்து கொடுத்து பணம் பொருட்கள் கொள்ளை! பதுளை தபால் ரயிலில் சம்பவம்!

குளிர்பானத்துடன் மயக்க மருந்து கொடுத்து பணம் பொருட்கள் கொள்ளை! பதுளை தபால் ரயிலில் சம்பவம்!

May 22nd, 2013

இரவு ரயில் பிரயாணம் செய்து கொண்டிருந்த இ.போ.ச. உத்தியோகத்தருக்கு குளிர்பானத்துடன் மயக்க மருந்தினைக் [...]

2.7 கி.மீ. நீளம் கொண்ட விண்கல் பூமிக்கு அருகில்..!

2.7 கி.மீ. நீளம் கொண்ட விண்கல் பூமிக்கு அருகில்..!

May 22nd, 2013

வருகின்ற மே மாதம் 31ம் திகதியன்று சுமார் 2.7 கி.மீற்றர் நீளமுள்ள விண்கல் ஒன்று பூமியை கடந்து செல்லப்[...]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*