Published On: Sat, Aug 18th, 2012

தின பலன் ஆகஸ்டு 18 2012

Share This
Tags

மேஷம்
இன்று திருப்திகரமாக இருக்கும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். முன்கோபம், வீண் அலைச்சல் விலகி நிம்மதி கிட்டும். குடும்பத்தில் அமைதி நிலவும். தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் சந்திப்பு நிகழும். வாகனச் செலவுகள் விலகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : மயில் நீலம், ப்ரவுன்

ரிஷபம்
காலைப் பொழுதிலிருந்தே மகிழ்ச்சி கிட்டும். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள். பிள்ளைகளின் உடல் நிலை சீராகும். பிராத்தனைகள் நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபார ரீதியாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். வாகனப் பழுது நீங்கும். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, பச்சை

மிதுனம்
நீண்ட நாளாக மனதிலிருந்து வந்த குழப்பங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். விருந்தினர்களின் வருகை உண்டு. பிள்ளைகளின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். சகோதர வகையில் மகிழ்ச்சி கிட்டும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் அனுசரித்துப் போவார்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : பிங்க், க்ரீம் வெள்ளை

கடகம்
காரியங்களை முடிப்பதிலிருந்த தடுமாற்ற நிலை மாறும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். சோம்பல், உடல் அசதி, நீங்கும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். கோபம் தணியும். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : பிஸ்தா பச்சை, மஞ்சள்

சிம்மம்
ராசிக்குள் சந்திரன் செல்வதால் மனஉளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : பிஸ்தா பச்சை, மஞ்சள்

கன்னி
சில காரியங்களை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. உறவினர், நண்பர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். யோகா, தியானம் என மனம் செல்லும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், வெளிர் நீலம்

துலாம்
இன்று பரபரப்புடன் காணப்படுவீர்கள். ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து எளிமையாக வாழ விரும்புவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும். உடன் பிறந்தவர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே, இளஞ்சிவப்பு

விருச்சிகம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கையில் காசுபணம் தேவையான அளவு இருக்கும். கடன் பிரச்சனைகள் தீரும். தந்தையாரின் உடல் நலம் சீராகும். நண்பர்களின் ஒத்துழைப்பால் சில காரியங்களை முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், கிளிப்பச்சை

தனுசு
இன்று பணப் பற்றாக்குறை நீங்கும். விரும்பியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிட்டும். அரசால் ஆதாயம் உண்டு. யோகா, தியானம் இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, ஊதா

மகரம்
சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். பழைய கடன் பிரச்சனை அவ்வப் போது மனசை வாட்டும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாக பேசுங்கள். உத்தியோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், வெளீர்நீலம்

கும்பம்
நீண்ட நாளாக தள்ளிப்போன காரியங்கள் இன்று முடியும். வியாபாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கொடுக்கல்-வாங்கலில் சுமுகமான நிலைக் காணப்படும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். மனக்குழப்பங்கள் விலகும். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : பிங்க், வெள்ளை

மீனம்
இன்று எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிள்ளை களின் உடல் நிலை சீராக இருக்கும். புண்ணிய ஸ்தலங்கள்ஸ் சென்று வருவீர்கள். பேச்சால் தடைபட்ட காரியங்களை முடிப்பீர்கள். வாகனச்செலவுகள் நீங்கும். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : மிண்ட்கிரே, வைலெட்

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

கருத்துக் கணிப்பு

செக்ஸ் இல்லாத காதல் சாத்தியமா?

View Results

Loading ... Loading ...