Breaking News
Home / latest-update / 2.03 மீட்டர் உயரம் ‘டவர்’ பவுலர் இந்தியாவுக்கு எதிராக நாளை அறிமுகம் ஆகிறார்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

2.03 மீட்டர் உயரம் ‘டவர்’ பவுலர் இந்தியாவுக்கு எதிராக நாளை அறிமுகம் ஆகிறார்

நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன். இவர் ஆறு அடி எட்டு அங்குலம் (2.03) உயரம் கொண்டவர். கிரிக்கெட்டில் விளையாடுவதில் இவர்தான் உயரமான நபர். இதனால் இவரை ‘டவர்’ பந்து வீச்சாளர் என்று அழைக்கின்றனர்.

வேகப்பந்து வீச்சாளரான இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிக்கான நியூசிலாந்து அணியில் இடம் பிடித்திருந்தார். ஆனால் ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்கவில்லை.



இந்தியா ஏ – நியூசிலாந்து ஏ அணிகளுக்கு இடையில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் (0-60, 2-69, 4-49) சிறப்பாக பந்து வீசினார். இதனால் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் இடம் கிடைத்தது.

ஹாமில்டனில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இவர் களம் இறங்கவில்லை. நியூசிலாந்து அணியில் இடம் பிடித்திருந்த இஷ் சோதி இன்று தொடங்கிய நியூசிலாந்து ‘ஏ’- இந்தியா ‘ஏ’ இடையிலான டெஸ்ட் போட்டியில் விளையாட விடுவிக்கப்பட்டுள்ளார். இதனால் நாளை ஆக்லாந்தில் நடைபெறும் போட்டியில் அறிமுகம் ஆவார் என்று நியூசிலாந்து பயிற்சிளார் ஷேன் ஜர்கென்சன் தெரிவித்துள்ளார்.






Check Also

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் மாலை 6.20 இற்கு வெளியான விசேட செய்தி……!

கொரோனா வைரஸை இல்லாதொழிக்கும் நோக்கில் கண்டி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு மீள் அறிவித்தல் …