Breaking News
Home / latest-update / சூப்பரான பிஷ் தவா கிரில்டு
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

சூப்பரான பிஷ் தவா கிரில்டு

தேவையான பொருட்கள்

  • வாவல் மீன் – 3
  • முட்டை – 1
  • அரிசி மாவு – 1/2 கப்
  • எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
  • இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
  • மஞ்சள் துாள் – 1/2 டீஸ்பூன்
  • கரம் மசாலா – 1 டீஸ்பூன்
  • மிளகாய் துாள் – 1 டீஸ்பூன்
  • மல்லி துாள் – 1 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – 1 கொத்து
  • கொத்தமல்லி தழை – சிறிதளவு
  • உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப




செய்முறை :

  • மீனை சுத்தம் செய்து, அதன் மீது குறுக்காக ஸ்லைஸ் போடுவது போல, ஆங்காங்கே வெட்டிக் கொள்ளவும்.
  • கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • ஒரு கிண்ணத்தில் எலுமிச்சை சாறு, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய் தூள், மல்லி துாள் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
  • மீனின் மீது இந்த மசாலாவை சேர்த்து நன்றாக பிரட்ட வேண்டும். மீனில் மசாலா நன்கு இறங்க வேண்டும்.
  • அடுத்து அதில் நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழையை சேர்க்கவும்.
  • இறுதியாக, அரிசி மாவு, முட்டை இரண்டையும் கலந்து, அரை மணிநேரம் ஊறவிடவும்.
  • ‘நான்-ஸ்டிக்’ கிரில் தவாவில் எண்ணெய் சூடானதும், மீனை நன்கு வறுக்கவும். இரண்டு பக்கமும் நன்கு வெந்ததும், தட்டில் வைத்து கொத்தமல்லி தழையை தூவி, வெங்காயம் மற்றும் எலுமிச்சை சேர்த்து பரிமாறவும்.
  • சூப்பரான பிஷ் தவா கிரில்டு ரெடி.






Check Also

ஐ.பி.எல் தாெடருக்கான அட்டவணை வெளியீடு!

இந்த வருடத்துக்கான ஐ.பி.எல் தாெடருக்கான நேர அட்டவணைகள் உத்தியோகபூர்வமாக வெளியாகியுள்ளன. இதன்படி முதலாவது போட்டி மார்ச் மாதம் 29ம் திகதி …