யாழ்ப்பாண கலாச்சாரத்தில் ஒருவரின் மறைவிற்குபின்னர் அவரின் 31ம் நாள்
நிறைவு நிகழ்வின் போது நினைவு மலர் வெளியிட படுவது
பாரம் பரியமாக பின்பற்ற படுகிறது
திதி நிர்ணயம் வெண்பாவிலும் வரலாறு அகவற்பாவிலும் புலம்பல்
விருத்தப்பாவிலும் எழுதப்படுதல் மரபு
இம் மரபு தற்போது மீறப்பட்டு வசன நடையில் எழுதப்படுவதும் உண்டு எது
எவ்வாறு இருப்பினும்
மிகுந்த பொருட்செலவில் வெளியிடப்படும் இவ் வெளியீடுகள் அனேகமானோர்களால்
படிக்கப்படாமலே போடப் படுகின்றன. உறவினர்கள் தங்கள் பெயர் இருக்கிறதா
என்ற தேடலுடன் நிறைவடைகின்றனர்
எனவே இந்நினைவு வெளியீடுகள் மற்றையோருக்கு பயன்படதக்கதாக இருக்க வேண்டும்
என நினைப்பது தவறுஇல்லை. இத்தகைய சிந்தனையில் அண்மைக்காலமாக
நினைவுவெளியீடாக சில இலக்கிய படைப்புக்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
இவ்வகையில்
யாழ்ப்பாண மாட்டுவண்டிச்சவாரி-
(அமரர் சீனியர் கிருஸ்ணபிள்ளை நினைவு வெளியீடு)
புதுமைக்கவிதைகள்
அமரா்.பெரியார் சரவணை வெளியீடு (தொகுப்பு சித்தாந்தன் ரமேஸ் கேதீஸ்வரன் )
நினைவில் இருந்து சொற்களுக்கு அமரர் ஆனந்தமயில் நினைவு வெளியீடு
போன்ற வெளியீடுகளும்
கவிஞா் சு.குணேஸ்வரனால் தொகுக்கப்பட்ட
அம்மா தேர்ந்த கவிதைகள்
பொன்னுத்துரை இராசம்மா நினைவு வெளியீடு
வெளிநாட்டு கதைகள் இராசையா தவமணி வெளியீடு
கிராமத்து வாசம்
குழந்தைப்பாடல்கள் ம.சின்னத்தம்பி நினைவு வெளியீடு
தேர்ந்த குறுங்கதைகள்
போன்ற நூல்களையும் குறிப்பிடலாம். இதே போன்று பொருளாதார வசதியீனம்
காரணமாக ஒரு நூலைத்தானும் வெளியிட முடியாமல் இருக்கின்ற நல்ல
எழுத்தாளரின் நூல்களை தனது அன்புக்குரியவர்களின் நினைவாக வெளியிட்டு
தமிழ் இலக்கிய உலகம் வளம் பெற உதவலாம்.
இதன் மூலம் அவர்கள் இலக்கியங்களின் ஊடாக அன்பானவர்களின் நினைவு
பேணப்படும் அல்லவா எனவே இத்தகைய பயனுள்ள முயற்சிகள் தொடர வேண்டும்.
வேலணையூர்-தாஸ்










