தமிழனுக்கு ஆங்கில மோகம் பிடித்து அலைந்து திரியும் இந்தக் காலத்தில் ஒரு சீனப் பெண்மணிக்கு தமிழ் மீது தீராக் காதல் ஏற்பட்டுள்ளது என்பதனை நீங்கள் நம்புவீர்களா?
சீனா நாட்டுத் தமிழ் வானொலி அறிவிப்பாளர் இவர்.
பிறப்பால் ஒரு சீனர். கலையரசி என்று தமிழ்ப்பெயர் சூட்டிக்கொண்டவர். என்னமாய் தமிழ் பேசுகிறார் கேளுங்கள்
இவர் தமிழ் உணர்வைப் பாருங்கள்.
தமிழ் மீது பித்துப் பிடித்துள்ள அந்த சீனப் பெண்மணி மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
நான் தமிழ்மொழியை சீனா முழுவதும் பரப்புவதையே இலட்சியமாக கொண்டுள்ளேன். அதற்காக சீன தமிழ் தொலைக்காட்சிகள். வானொலிகள். ஆரம்பிக்கப்பட்டுள்ளது
இதில் முழுக்க சீனர்கள் மட்டுமே பணிபுரிகிறார்கள்.
ஆயிரக்கணக்கான சீனர்கள் தமிழ்நாட்டில் தமிழ் கற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.
அதிலே தேர்ச்சி பெற்றவர்களை தொலைக்காட்சி. வானொலிகள் பணிக்கு அமர்த்தி இருக்கிறோம்.
அதேபோல் தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு தமிழ் திரைப்படங்கள் சின்னத்திரை சினிமா பாடல்களுக்கு மக்கள் முக்கியத்துவம் கொடுத்து இதை ரசிக்கிறார்களோ அதேபோல் தற்போது சீனாவிலும் தமிழ் மொழியின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.
தமிழ் இனி மெல்ல சாகும் என்ற வாக்கு பொய்த்து போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.










