லண்டனில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டியில், இநதிய பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
பேட்மிட்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில், காலிறுதியில் தன்னுடன் விளையாடிய டென்மார்க் வீராங்கனையை தோற்கடித்து சாய்னா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
இதன் மூலம், அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இநதிய வீராங்கனை என்கிற புகழையும் சாய்னா நேவால் பெறுவதாக இநதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் முதல் தங்கப்பதக்கக் கனவை சாய்னா நேவால் இதன்மூலம் நிறைவேற்றுவார் எனும் நம்பிக்கை அதிகரித்துள்ளது.












