லண்டன் ஒலிம்பிக் : நேற்றைய ஐந்தாம் நாள் போட்டிகள் ஒரு பார்வை

லண்டன் ஒலிம்பிக் நேற்றைய ஐந்தாம் நாள் போட்டிகளில் இந்திய வீர, வீராங்கணைகளின் போட்டி முடிவுகள் எவ்வாறு இருந்தன என பார்போம்.

நேற்றைய ஆடவருக்கான பேட்மிண்டன் போட்டியில் இலங்கை வீரர் கருணாரத்ணேவை சந்தித்த இந்தியாவின் காஷ்யப் அப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் காலிறுதிக்கு முன்னேறினார்.

இதன் மூலம், ஒலிம்பிக்கின் காலிறுதி பேட்மிண்டன் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் எனும் பெருமையையும் அவர் பெற்றார். எனினும் காலிறுதியில் அவர் உலகின் முதல் நிலை வீரரான மலேசியாவின் லீ சோங் வீயை சந்திக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மகளீருக்கான பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவாலும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். உலகின் ஐந்தாம் நிலை வீராங்கணையான செய்னா நேற்றைய போட்டியில் நெதர்லாந்தின் யா ஜியை சந்தித்தார். இப்போட்டியில் 21-14, 21-16 என நேர் செட் கணக்கில் அவர் வெற்றி பெற்றார். கடந்த முறை பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளிலும் சாய்னா நேவால் காலிறுதி வரை முன்னேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வில்வித்தை தனிநபர் முதல் சுற்று போட்டியில் தீபிகா குமாரி தோல்வி அடைந்துள்ளார். இங்கிலாந்தின் ஆமி ஆலிவரிடம் அவர் போராடி தோல்வி அடைந்துள்ளனார்.

ஆடவருக்காக லைட் வெல்டர் 65 கி.கி எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் மனோஜ் குமார் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். இதே போன்று விஜேந்திரர் சிங், ஜெய் பகவான், தேவேந்திர சிங் ஆகியோரும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

பெண்களுக்கான 25 மீ பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டியின் இறுதிச்சுற்றுக்கான தகுதிச்சுற்றில் இந்தியாவின் ராகி சர்னோபட், அனுராஜ் சிங் ஆகியோர் தோல்வி அடைந்துள்ளனர்.

Special Recent Posts

கர்ப்பமாவதற்கான வாய்ப்பில்லை என்பதற்கான அறிகுறிகள்!!!

கர்ப்பமாவதற்கான வாய்ப்பில்லை என்பதற்கான அறிகுறிகள்!!!

May 20th, 2013

பொதுவாக கர்ப்பமாவதற்கு 20-25 தான் சரியான வயது. ஆனால் தற்போது நிறைய பெண்கள், எதிர்காலத்தை மனதில் கொண்[...]

14வது பொண்டாட்டியாக்கப் பார்க்கும் ‘லந்து’ மன்னர்.. ஆப்பிரிக்காவிலிருந்து ஓடி வந்த பெண்!

14வது பொண்டாட்டியாக்கப் பார்க்கும் 'லந்து' மன்னர்.. ஆப்பிரிக்காவிலிருந்து ஓடி வந்த பெண்!

May 20th, 2013

சுவாசிலாந்து நாட்டு மன்னர் 3வது மஸ்வதி என்னை தனது 14வது மனைவியாக்கத் துடிக்கிறார். எனக்கு புகலிடம் த[...]

இவர் அழைத்தார், அவர் வந்தார்!

இவர் அழைத்தார், அவர் வந்தார்!

May 20th, 2013

நூலில்லாத பட்டம் போலாகிவிட்டார் சோனியா அகர்வால். அதற்காக படத்தில் நடிக்க யார் அழைத்தாலும் அதில் நடி[...]

சீனாவில் பெய்து வரும் கனமழை:55 பேர் இதுவரை பலி

சீனாவில் பெய்து வரும் கனமழை:55 பேர் இதுவரை பலி

May 20th, 2013

தெற்கு சீனாவின் பல பகுதிகளில் பெய்து வரும் கனமழையினாலும் ஆலங்கட்டிப் பொழிவு மற்றும் புயலினாலும் இதுவ[...]

ஸ்ரீசாந்த் கைதானது எப்படி : பரபரப்புத் தகவல்கள்

ஸ்ரீசாந்த் கைதானது எப்படி : பரபரப்புத் தகவல்கள்

May 20th, 2013

ஐபிஎல் சூதாட்டத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கைதானது எப்படி, என்று சில பர பரப்புத் தகவல்க[...]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*