Breaking News
Home / latest-update / குறைந்த விலையில் உருவாகும் ரியல்மி வயர்லெஸ் இயர்பட்ஸ்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

குறைந்த விலையில் உருவாகும் ரியல்மி வயர்லெஸ் இயர்பட்ஸ்

ரியல்மி பிராண்டின் புதிய ரியல்மி இயர்பட்ஸ் விவரங்கள் என்.சி.சி. (தேசிய தகவல் பரிமாற்ற ஆணையம்) சான்று பெற்று இருக்கிறது. இந்த இயர்பட்ஸ் RMA205 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது.

மேலும் புதிய இயர்பட்ஸ் மெல்லிய கேஸ் கொண்டிருக்கிறது. இதன் வடிவமைப்பும் மிக மெல்லியதாக இருக்கிறது. சார்ஜிங் செய்ய மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட் வழங்கப்படுகிறது. இதன் கேஸ் 400 எம்.ஏ.ஹெச். பேட்டரியும், ஒவ்வொரு ஹெட்செட்டிலும் 25 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.



இந்த இயர்பட்ஸ் ரியல்மி பட்ஸ் ஏர் நியோ எனும் பெயரில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் குறைந்தபட்சம் மூன்று மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்கும் என எதிர்பார்க்கலாம். இந்த இயர்பட்ஸ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை கொண்டிருக்குமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

ரியல்மி பட்ஸ் ஏர் நியோ விலை இந்தியாவில் ரூ. 3000 பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றிய முழு விவரங்கள் வரும் வாரங்களில் வெளியாகலாம்.



Check Also

ஐ.பி.எல் தாெடருக்கான அட்டவணை வெளியீடு!

இந்த வருடத்துக்கான ஐ.பி.எல் தாெடருக்கான நேர அட்டவணைகள் உத்தியோகபூர்வமாக வெளியாகியுள்ளன. இதன்படி முதலாவது போட்டி மார்ச் மாதம் 29ம் திகதி …