Published On: Sat, Jul 28th, 2012

தின பலன் 28 ஜூலை 2012

Share This
Tags

மேஷம்
சந்திராஷ்டமம் தொடங்குவதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகளை ஆலோசித்து முடிவுகள் எடுப்பது நல்லது. அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆலிவ் பச்சை, இளஞ்சிவப்பு

ரிஷபம்
நீண்ட நாள் எண்ணங்கள் பூர்த்தியாக முயற்சிப்பீர்கள். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறைக் காட்டுவீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். உத்தியோகத்தில் மன உளைச்சல் நீங்கும். பணிகளை விரைந்து முடிப்பீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பெற்றோரின் ஆதரவு உண்டு. வாகனத்தை சீர்செய்வீர்கள். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ஆரஞ்சு

மிதுனம்
இன்று மன உறுதியுடன் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உறவினர்கள், நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியுண்டு. குழந்தைகளின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். தந்தையின் உடல் நிலை சீராகும். வியாபாத்தில் பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். மாணவர்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே, மஞ்சள்

கடகம்
புது முயற்சிகள் வெற்றி தரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணவரவு உண்டு. கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். முன்கோபம் விலகும். பிரியமானவர்களைச் சந்தித்து பொழுதைக் கழிப்பீர்கள். அலுவலகப் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, ஊதா

சிம்மம்
உங்களின் வெளிப்படையான பேச்சை அனைவரும் ரசிப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கணவன்-மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவீர்கள். பிள்ளைகளின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீகள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு கிட்டும். கன்னிப்பெண்களின் உடல்நிலை சீராகும். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், கரு நீலம்

கன்னி
இன்று புதுப்பொலிவுடன் காணப்படுவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும். கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். தாய்வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். முன்கோபம் விலகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை விரைந்து வசூலிப்பீர்கள். அரசுக் காரியங்களில் அனுகூலம் உண்டு. வீடு, வாகனச் செலவுகள் குறையும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், கிரே

துலாம்
செயலில் வேகத்தைக் காட்டுவீர்கள். வியாபார ரீதியாக சில பிரபலங்களைச் சந்திப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். மாணவர்களின் நினைவாற்றல் கூடும். கன்னிப்பெண்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, மஞ்சள்

விருச்சிகம்
ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. மற்றவர்கள் பிரச்னையில் தலையிடுவதால் வீண் பழிச் சொல் ஏற்படக்கூடும். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக அவமானம் வரக்கூடும். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆலிவ் பச்சை, ஆரஞ்சு

தனுசு
இன்று தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர்கள். மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்துச் செல்லும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். பழைய கடன் பிரச்சனை அவ்வப் போது மனசை வாட்டும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், வெள்ளை

மகரம்
முகமலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணப்பற்றாக்குறை நீங்கும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வாகனத்தை சீர்செய்வீர்கள். கன்னிப் பெண்களுக்கு பெற்றொரின் ஆதரவு கிட்டும். மாணவர்கள் உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். வாகனவசதி பெருகும். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : நீலம், மஞ்சள்

கும்பம்
தன்னம்பிக்கை துளிர்விடும். தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சியுண்டு. வருங்காலத் திட்டங்களைப் பற்றி நண்பர்களிடம் விவாதிப்பீர்கள். தாயாரின் உடல்நிலை சீராக இருக்கும். கண் எரிச்சல், தூக்கமின்மை விலகும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : ஊதா, இளஞ்சிவப்பு

மீனம்
இன்று திறம்பட செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும். வியாபாத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். அரசு விஷயங்களில் அனுகூலமான நிலைக் காணப்படும். வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். முன்கோபம், வீண் டென்ஷன் விலகும். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : மயில் நீலம், ப்ரவுன்

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

கருத்துக் கணிப்பு

செக்ஸ் இல்லாத காதல் சாத்தியமா?

View Results

Loading ... Loading ...