Breaking News
Home / latest-update / அரேபியன் சிக்கன் மண்டி பிரியாணி
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

அரேபியன் சிக்கன் மண்டி பிரியாணி

தேவையான பொருட்கள்

  • சிக்கன் எலும்புடன் – 500 கிராம் (1 பெரிய துண்டு),
  • வெங்காயம் – 1
  • தக்காளி – 1,
  • பச்சை மிளகாய் – 1,
  • இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்,
  • பிரியாணி இலை – 3,
  • நெய் – 1 டீஸ்பூன்,
  • ஏலக்காய் – 2,
  • பட்டை – 2,
  • லவங்கம் – 1,
  • மிளகு – 1 டீஸ்பூன்,
  • ஆலிவ் ஆயில் – 2 டேபிள் ஸ்பூன்,
  • வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,
  • உப்பு – தேவைக்கு.
  • பாஸ்மதி அரிசி – 2 கப்,
  • தண்ணீர் – 4 கப்.




மண்டி பொடி செய்யத் தேவையான பொருட்கள் :

  • ஏலக்காய் – 1 டேபிள் ஸ்பூன்,
  • லவங்கம் – 1 டேபிள் ஸ்பூன்,
  • முழு மிளகு – 1/2 டேபிள் ஸ்பூன்,
  • இஞ்சி பொடி – 1/2 டேபிள் ஸ்பூன்,
  • பிரியாணி இலை – 2.

செய்முறை

  • வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றாமல் மண்டிக்கு தேவையான பொருட்களை மிதமான தீயில் வறுத்து எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.
  • அரிசியை கழுவி விட்டு 20 நிமிடம் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி விட்டு, தவாவில் 10-15 நிமிடம் ஆலிவ் ஆயில் ஊற்றி அரிசியை போட்டு வறுத்து கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி அதில் பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு, மிளகு சேர்த்து கிளறவும்.
  • பின் அதில் தக்காளி மற்றும் பச்சை மிளகாயை அரைத்து அதில் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
  • பின் அதில் சிக்கன், மண்டி பொடி (முக்கால் பாகம் சேர்த்துவிட்டு கால் பாகம் வைக்கவும்) 4 கப் தண்ணீர் ஊற்றி 10-15 நிமிடம் வேக வைக்கவும்.
  • பின் அதில் உள்ள சிக்கனை தனியாக எடுத்து வைக்கவும்.
  • அடுத்து இதில் வறுத்த வைத்துள்ள அரிசியினை சேர்த்து நன்கு வேகவிடவும்.
  • வெந்ததும் சாதத்தின் நடுவில் ஒரு கிண்ணத்தில் நெய்யை ஊற்றி, அதில் கறித்துண்டு (Charcoal hot) ஒன்று போட்டு மூடி வைக்கவும்.
  • அதன் பிறகு மீதி உள்ள மண்டி பொடி மற்றும் வெண்ணெயை வேகவைத்துள்ள சிக்கன் மேல் தடவி oven-ல் 20-25 நிமிடம் பொன்னிறமாக வேக வைக்கவும்.
  • வேகவைத்த அரிசியுடன் சிக்கனை வைத்து சூடாக பரிமாறவும்.





Check Also

ஐ.பி.எல் தாெடருக்கான அட்டவணை வெளியீடு!

இந்த வருடத்துக்கான ஐ.பி.எல் தாெடருக்கான நேர அட்டவணைகள் உத்தியோகபூர்வமாக வெளியாகியுள்ளன. இதன்படி முதலாவது போட்டி மார்ச் மாதம் 29ம் திகதி …