Breaking News
Home / latest-update / மாலை நேர ஸ்நாக்ஸ் அவல் வடை
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

மாலை நேர ஸ்நாக்ஸ் அவல் வடை

தேவையான பொருட்கள்

  • மெல்லிய அவல் – 2 கப்,
  • அரிசி மாவு – 1/4 கப்,
  • ரவை (வெள்ளை) – 3 டேபிள் ஸ்பூன்,
  • உப்பு – தேவைக்கு,
  • எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு,
  • மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,
  • கொரகொரப்பாகப் பொடித்த மிளகு, சீரகம் – 1 டீஸ்பூன்,
  • பச்சை மிளகாய் – 2,
  • கொத்தமல்லித்தழை – சிறிதளவு
  • கறிவேப்பிலை – 6 இதழ்கள்,
  • கேரட் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்,
  • தேங்காய்த்துருவல் – 2 டேபிள் ஸ்பூன்,
  • பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்,
  • பெரிய வெங்காயம் – 1.

 


செய்முறை

  • வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • மெல்லிய அவலை நன்றாகக் கழுவி (ஊற விட வேண்டாம்), நீரினை வடிகட்டி கொள்ளவும்.
  • வடிகட்டிய அவலை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, அரிசி மாவு, உப்பு, மஞ்சள் தூள், கொரகொரப்பாகப் பொடித்த மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கேரட் துருவல், தேங்காய்த்துருவல், பெருங்காயம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  • கடைசியாக ரவை சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாக தட்டி போட்டு பொரித்து எடுக்கவும்.
  • சூப்பரான அவல் வடை ரெடி.





Check Also

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இறந்தவரின் இறுதிக்கிரியைகள் இன்று (வீடியோ)

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மற்றுமொரு இலங்கையர் பிரித்தானியாவில் பலியானார் 70 வயதுடைய ஓய்வு பெற்ற மருத்துவர் ஒருவரே இவ்வாறு …