Breaking News
Home / latest-update / பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர் எம்.பி.க்கு கொலை மிரட்டல்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர் எம்.பி.க்கு கொலை மிரட்டல்

மத்தியபிரதேசத்தை சேர்ந்த பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர். ஏற்கனவே குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கிய பிரக்யா சிங் தாகூர் தற்போது எம்.பி.யாக இருக்கிறார். அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவது அவரது வழக்கம். சமீபத்தில் மகாத்மா காந்தியை அவமதித்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது.

இந்த நிலையில் புனேவில் இருந்து பிரக்யா எம்.பி.க்கு ஒரு கடிதம் வந்துள்ளது. கவரில் அடைக்கப்பட்டுள்ள அந்த கடிதத்தை பிரக்யா எம்.பி. பிரித்து பார்த்தார். அதில் மகாத்மா காந்தியையும், மும்பை பயங்கரவாத தடுப்பு பிரிவு முன்னாள் தலைவர் ஹேமந்த் கார்க்கரேயையும் அவமதித்ததற்காக நீங்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க போகிறீர்கள். உங்களை கொலை செய்வோம் என்று கூறப்பட்டுள்ளது.



அந்த கடிதத்தின் பின் பகுதியில் அனுப்பும் நபருடைய பெயரில் பல முகவரிகளை குறிப்பிட்டு இருக்கிறார்கள். மேலும் இஸ்லாமிய அமைப்பு ஒன்று அனுப்பியதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் இந்த கடிதம் கடந்த அக்டோபர் மாதமே வந்ததாகவும், அதை இப்போது தான் பிரித்ததாகவும், பிரக்யா எம்.பி. கூறி இருக்கிறார். இதுபற்றி தனது அலுவலகம் உள்ள போபால் கமலா நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த கடிதத்தில் வி‌ஷ ரசாயனம் தடவப்பட்டிருந்ததாகவும், இதனால் தனது கையில் அரிப்பு ஏற்பட்டதுடன் தோல் நோய் தொற்று உருவானதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுசம்பந்தமாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நரேந்திர சல்ஜா கூறும்போது, 4 மாதத்துக்கு முன்பு வந்த கடிதத்தை இப்போது தான் பிரித்தேன் என்று சொல்வது நம்பும்படியாக இல்லை. பிரக்யா எம்.பி. ஏதோ நாடகம் ஆடுகிறார் என்று கூறியுள்ளார்.






Check Also

பொருளாதார வளர்ச்சி 4.8 சதவீதத்துக்கும் கீழே குறையலாம் – ப.சிதம்பரம் கருத்து

2019-20-ல் இந்திய பொருளாதார வளர்ச்சி 5.8 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்) கணித்து இருந்தது. தற்போது இந்தியாவின் …