Breaking News
Home / latest-update / ஒயிட் பால் கிரிக்கெட்டில் ஸ்மித்தை விராட் கோலியுடன் ஒப்பிடவே முடியாது: கவுதம் காம்பிர்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

ஒயிட் பால் கிரிக்கெட்டில் ஸ்மித்தை விராட் கோலியுடன் ஒப்பிடவே முடியாது: கவுதம் காம்பிர்

விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன், ஜோ ரூட் ஆகியோரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்ற விவாதம் நடைபெற்று கொண்டே இருக்கிறது. டெஸ்ட் போட்டியில் நான்கு பேரும் அசத்தி வருகிறார்கள். ஆனால் ஒருநாள் போட்டியில் விராட் கோலி உச்சத்தில் இருக்கிறார். டி20-யையும் சேர்த்து மூன்று வகை கிரிக்கெட்டிலும் 50-க்கு மேல் சராசரி வைத்துள்ளார்.



இந்நிலையில் ஸ்டீவ் ஸ்மித்தை அவருடன் ஒப்பிடவே முடியாது என்று கவுதம் காம்பிர் தெரிவித்துள்ளா். இதுகுறித்து கவுதம் காம்பிர் கூறுகையில் ‘‘ஒயிட் பால் கிரிக்கெட்டில் ஸ்மித்தை விட விராட் கோலி மிக மிக உயர்ந்தவர். இதில் ஒப்பீடு என்பதற்கு வழியே கிடையாது. கிரிக்கெட்டில் கோலியை ஸ்மித்துடன் ஒப்பிடமாட்டேன்.

ஸ்மித் எந்த இடத்தில் களம் இறங்கி பேட்டிங் செய்ய இருக்கிறார் என்பதை பார்க்க விரும்புகிறேன். அவரை 4-வது இடத்திற்கு தள்ளுவார்கள். அல்லது 3 இடத்தில் களம் இறக்கினால், லாபஸ்சாக்னேவுக்கு 4-வது இடம் கிடைக்குமா?’’ என்றார்.





Check Also

சீனாவில் கொரோனா வைரசுக்கு 9 பேர் பலி- மற்ற நாடுகளுக்கும் பரவும் அபாயம்

‘கொரோனா வைரஸ்’ என கருதப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல், இவ்வாண்டின் தொடக்கம் முதல் சீனாவில் பரவி வருகிறது. முதலில், சீனாவின் …