Breaking News
Home / latest-update / முல்லைத்தீவில் சற்று முன்னர் கோர விபத்து… இளம் தம்பதியை மோதித் தள்ளிய கடற்படை வாகனம்..!! கணவன் ஸ்தலத்தில் பலி..!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

முல்லைத்தீவில் சற்று முன்னர் கோர விபத்து… இளம் தம்பதியை மோதித் தள்ளிய கடற்படை வாகனம்..!! கணவன் ஸ்தலத்தில் பலி..!!

வட்டுவாகல் பகுதியில் கடற்படையினரின் வாகனம் மோ தியதில் முள்ளிவாய்க்கால் உப தபால் அதிபர் படுகாயம் அடைந்த நிலையில் அவருடைய கணவர் சம்பவ இடத்திலேயே ப ரிதாபமாக உயிரிழந்துள்ளார்.விபத்தில் காயமடைந்த மனைவி ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

வட்டுவாகல் சப்த கன்னியர் ஆலயத்தின் முன்பாக கணவன், மனைவி இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது கடற்படையினருடைய வாகனம் ஒன்று மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.விபத்தில் படுகாயம் அடைந்தவர் முள்ளிவாய்க்கால் உப தபாலக அதிபரான ஜீவன் டினுசா (வயது24) என்றும், உயிரிழந்த அவருடைய கணவரான துணுக்காயைச்சேர்ந்த கே.ஜீவன் (வயது 32) எனவும் தெரியவருகிறது.விபத்துடன் தொடர்புடைய சாரதியை முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Check Also

பொருளாதார வளர்ச்சி 4.8 சதவீதத்துக்கும் கீழே குறையலாம் – ப.சிதம்பரம் கருத்து

2019-20-ல் இந்திய பொருளாதார வளர்ச்சி 5.8 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்) கணித்து இருந்தது. தற்போது இந்தியாவின் …