Breaking News
Home / latest-update / யாழில் காதல் விவகாரத்தால் பாடசாலை மாணவி தற்கொலை!! தாய் தற்கொலை முயற்சி!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

யாழில் காதல் விவகாரத்தால் பாடசாலை மாணவி தற்கொலை!! தாய் தற்கொலை முயற்சி!!

யாழ்.கொக்குவில் பகுதியில் மாணவி ஒருவா் தற்கொலை செய்து கொண்ட நிலையில், மாணவியின் தாயாா் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகளின் தற்கொலை தொடா்பில் பொலிஸாா் விசாரணை நடாத்திக் கொண்டிருக்கும்போது தாயார் தற்கொலைக்கு முயன்ற நிலையில் பொலிஸாரால் காப்பாற்றப்பட்டுள்ளாா்.

கொக்குவில் இந்துக்கல்லுாாியில் உயிாியல் பிாிவில் கல்வி கற்கும் மகேஸ்வரன் கஜானி என்ற மாணவியே காதல் விவகாரம் காரணமாக துாக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டாா்.

குறித்த தற்கொலை தொடா்பாக பொலிஸாா் விசாரணை நடாத்தியிருக்கின்றனா்.

இதன்போது உயிாிழந்த மாணவியின் தாயாா் வீட்டு அறைக்குள் திடீரென சென்று கதவை பூட்டி தனக்கு தானே மண்ணெண்ணையை ஊற்றி தீ மூட்டியுள்ளாா்.

இதனையடுத்து கதவை உடைத்து தாயை தீ காயங்களுடன் காப்பாற்றிய பொலிஸாா், இறந்துபோன மகளையும், படுகாயமடைந்த தாயையும் ஒரு அம்புலன்ஸ் வண்டியில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளமை கொக்குவில் பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை குறித்த மாணவி காதல் விவகாரத்தினால் தற்கொலை செய்துகொண்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Check Also

சீனாவில் கொரோனா வைரசுக்கு 9 பேர் பலி- மற்ற நாடுகளுக்கும் பரவும் அபாயம்

‘கொரோனா வைரஸ்’ என கருதப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல், இவ்வாண்டின் தொடக்கம் முதல் சீனாவில் பரவி வருகிறது. முதலில், சீனாவின் …