Published On: Fri, Jul 20th, 2012

கதிர்காமக் கந்தன் ஆலய ஆடிவேல் மகோற்சவம்!

Share This
Tags

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமக் கந்தன் ஆலய ஆடிவேல் மகோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

கதிர்காம திருத்தலத்தில் கன்னிக்கால் நாட்டும் வைபவம் இடம்பெற்று 45 நாட்கள் கடந்துள்ள நிலையில் நேற்று ஆடிவேல் மகோற்சவத்தின் முதலாவது ஊர்வலம் நடைபெறவுள்ளது.

நேற்றிரவு ஏழு மணியளவில் கதிர்காமக் கந்தன் ஆலயத்தில் நடைபெறும் விசேட பூஜை வழிபாடுகளை அடுத்து இரவு எட்டு மணியளவில் ஊர்வலம் ஆரம்பமாகியது.

இந்த ஊர்வலம் வள்ளியம்மை ஆலயம் வரை சென்று மீண்டும் கதிர்காமக் கந்தனின் ஆலயத்தைச் சென்றடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் முதலாம் திகதி வரை தினமும் கதிர்காமக் கந்தனின் ஊர்வலம் நடைபெறவுள்ளது.

ஆடிவேல் மகோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக எதிர்வரும் 30 ஆம் திகதி தீ மிதிப்பு வைபவம் இடம்பெறவுள்ளது.

மாணிக்க கங்கையில் அடுத்த மாதம் இரண்டாம் திகதி நடைபெறவுள்ள தீர்த்த உற்சவத்துடன் கதிர்காமம் திருத்தலத்தின் ஆடிவேல் மகோற்சவம் நிறைவுபெறவுள்ளது.

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

கருத்துக் கணிப்பு

செக்ஸ் இல்லாத காதல் சாத்தியமா?

View Results

Loading ... Loading ...