Breaking News
Home / latest-update / திருமணத்திற்கு தயாராகும் பெண்கள் கவனிக்க வேண்டியவை
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

திருமணத்திற்கு தயாராகும் பெண்கள் கவனிக்க வேண்டியவை

நான் திருமணத்திற்கு(married) மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் முற்றிலும் தயாராக இருக்கிறேன் என்ற எண்ணம் முதலில் உங்களுக்கு ஏற்பட வேண்டும். அந்த எண்ணம் ஏற்பட்ட பிறகே உங்களுக்கு வாழ்க்கைத் துணையைத் தேடுவதற்கு சம்மதிக்க வேண்டும். உங்களது வாழ்க்கைத் துணை எப்படி இருக்க வேண்டும், என்ன வேலை செய்ய வேண்டும், சம்பளம் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பற்றிய உங்களது விருப்பங்களில் தெளிவாக இருக்க வேண்டும்.

ஒருவருடைய கல்வி மற்றும் சம்பளம் இரண்டும்தான் தம்பதியரிடையே ஈகோ பிரச்சினை ஏற்படக் காரணமாகிறது. எனவே உங்களுக்கு வரப்போகும் வாழ்க்கைத் துணை எப்படிப்பட்ட கல்வித் தகுதி உடையவராய் இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள். வரப்போகும் வாழ்க்கைத் துணையிடம் உள்ள குணாதிசயங்கள், பழக்க வழக்கங்கள், பொழுது போக்குகள் மற்றும் சிந்தனைகள் உங்கள் ரசனையுடன் ஒத்துப்போகுமா என்பதை கவனிக்கவேண்டியது முக்கியம்.



பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணமாக(married) இருந்தால், தங்களுக்கு வரப்போகும் வாழ்க்கைத் துணையின் குடும்பப் பின்னணி, வரதட்சணை, அந்தஸ்து ஆகியவை கவனிக்கப்படுகிறது. ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி அவர் எப்படிப்பட்டவர், நமக்கு ஏற்ற துணையாக இருப்பாரா என்பதற்கு முக்கியத்துவம் கொடுங்கள். அப்படிப்பட்ட வாழ்க்கைதான் இனிமையாக இருக்கும்.

நீங்கள் எப்படிப்பட்ட வாழ்க்கைத் துணையை(married) எதிர்பார்க்கிறீர்கள் என்பதை முதலில் உங்கள் பெற்றோரிடம் தெரியப்படுத்துங்கள். பெற்றோர் உங்களுக்குப் பிடித்த மாதிரி தேர்ந்தெடுத்தால்தான் உங்கள் வாழ்க்கையில் எந்த மனக் கசப்பும் நேராது. வாழ்க்கையும் இனிமையாக இருக்கும்.

என்னதான் இருந்தாலும் நீங்கள் 100 சதவீதம் எதிர்பார்ப்பது போன்ற வாழ்க்கைத் துணை கிடைப்பது கடினம். ஆதலால் நீங்கள் எதிர்பார்த்த அதிக பொருத்தங்களுடன் கூடிய வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதுடன், அட்ஜஸ்ட் செய்யும் மனப் பக்குவத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

நீங்கள் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்பதைத் திருமணத்திற்கு(married) முன்பே உங்களுக்கு வரப்போகும் வாழ்க்கைத் துணையிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அதனால் திருமணத்திற்குப்(married) பிறகு எந்தக் குழப்பங்களும் ஏற்படாது. நாம் மனம் விட்டுப் பேசுவதில் முக்கியமான விஷயம், நம்மைப் பற்றிய எந்த விஷயத்தையும் மறைத்துவிடாமல் சொல்லிவிடும்போது பிளாஷ்பேக் திருப்பங்களுக்கு வாய்ப்பில்லாது போய்விடுகிறது.



வாழ்க்கை பந்தத்தில் இவருடன் இணைந்தால் சரி வராது என மனதில் பட்டுவிட்டால் திருமணம் வரை போகாமல் முதலிலேயே பக்குவமாக உறவை முறித்துக் கொள்ள வேண்டும். நிச்சயதார்த்தத்திற்கு முன்பே உங்களது வருங்கால வாழ்க்கைத் துணையுடன் தொலைபேசி மூலமாகப் பேசுவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அதில் கண்ணியமாக உங்களது விருப்பு வெறுப்புகளை அவருக்கு தெரியப்படுத்துங்கள். அவருடைய விருப்பு மற்றும் வெறுப்புகளையும் புரிந்துக் கொள்ளுங்கள்.

உடை விஷயங்கள் சிலருக்குப் பிடிக்கும். சிலருக்குப் பிடிக்காது. உங்களது வாழ்க்கைத் துணை எந்த மாதிரியான உடை உடுத்த வேண்டும் என்று நினைப்பதைப் பற்றி முதலில் பேசுங்கள். உடை கலாச்சாரத்தை மாற்றுவதற்கு பெரும்பாலும் யாரும் முன்வருவதில்லை. ஆனால் உங்களது விருப்பத்தை முதலிலேயே சொல்லி விடுங்கள்.



உங்களுக்கு எந்தத் துறையில் விருப்பம் என்பதைப் பற்றியும், உங்களது லட்சியம் என்ன என்பது பற்றியும் பேசுங்கள். உங்களுக்கு உள்நாட்டு வேலை மற்றும் வெளிநாட்டு வேலைகளில் உள்ள விருப்பத்தைப் பற்றியும் பேசுங்கள்.

பெற்றோர் அல்லது மற்றவர் நிர்பந்தத்திற்குப் பணிந்து வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க வேண்டாம். திருமணத்திற்கு முன்பே உங்களது வாழ்க்கைத் துணையின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களைப் பற்றிய விவரங்களைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

உங்களது வாழ்க்கைத் துணை வேலைக்கு சென்று கொண்டிருந்தால், திருமணத்திற்குப் பிறகு வேலைக்கு செல்லலாமா, வேண்டாமா என்பதை முதலிலேயே தெரிவித்து விடுங்கள். இப்படி செய்வதால் திருமணத்திற்குப் பிறகு ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.

சிலர் அமைதியான சுபாவம் உடையவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு எப்பொழுதும் குறைசொல்லும் அல்லது கோபப்படுகின்ற வாழ்க்கைத் துணை அமைந்து விடுவார்கள். இது திருமணத்திற்குப் பிறகு நிறைய பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே உங்கள் வாழ்க்கைத் துணை எப்படிப்பட்ட சுபாவம் உடையவர் என்பதை முதலில் தெரிந்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு உங்கள் திருமணத்துக்கு சந்தோஷமாய் சம்மதம் சொல்லுங்கள்.



Check Also

பிரச்சினைகளை முன்வைப்பதற்கான தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு தீர்வு வழங்கக்கூடிய ஒருங்கிணைப்பு ஒத்துழைப்பிற்கான பொறிமுறையொன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. அவசர நிலமையின் அடிப்படையில் செயற்படும்போது ஒருங்கிணைப்பு …