Published On: Thu, Jul 19th, 2012

ஆடி அமாவாசை தினமான நேற்று கீரிமலையில் குவிந்த பக்தர்கள்!

Share This
Tags

நேற்றைய தினம் உலகெங்கும் வாழும் இந்துக்களுக்கு முக்கியமான நாளாகும்.

ஆடி அமாவாசையையொட்டி பிதிர்க்கடன் நிறைவேற்றுவதற்காக ஆயிரக்கணக்கான பொது மக்கள் கீரிமலை கண்டாங்கி தீர்த்தக் கரையில் ஒன்று திரண்டனர்.

இந்துக்களின் வழமைப்படி அப்பா இறந்திருந்தால் பிள்ளைகள் நேற்றைய தினம் விரதமிருந்து அவரின் ஆத்மா சாந்தியடைய பிதிர்க்கடன் நிறைவேற்றுவார்கள்.

அதிகாலை முதல் தனியார் வாகனங்கள், இலங்கை போக்குவரத்து சபை பஸ் வண்டிகள், மினி பஸ்கள், மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்கள் எனப் பல வாகனங்களிலும் யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளிலும் இருந்து வந்து தமது பெற்றோர்களின் பிதிர்க்கடன்களை நிறைவேற்றினார்கள்.

கீரிமலையின் தீர்த்தக்கரையில் பல அந்தணர்கள் பிதிர்க்கடன் செலுத்துவதில் ஈடுபட்டனர்.

ஏராளமான மக்கள் கீரிமலையின் கண்டாங்கி தீர்த்தக் கரையில் ஒன்று திரண்டதால் சன நெரிசலும் ஏற்பட்டது.

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

கருத்துக் கணிப்பு

செக்ஸ் இல்லாத காதல் சாத்தியமா?

View Results

Loading ... Loading ...