கூட்டாளிகள் மூவரை வாளால் வெட்டிய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று யாழ்ப்பாணம், குருநகர் பிரசேத்தில் அரங்கேறியுள்ளது.
குடித்து விட்டு மனைவியைப் பற்றி நண்பர்கள் தகாத வார்த்தையால் கதைத்தற்காகவே இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்த மூவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ச்சியான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.










