Published On: Wed, Jul 18th, 2012

விஜய், அஜித் ரசிகர்களிடையே ஏற்பட்ட கைகலப்பு…மூவர் காயம்…

Share This
Tags

திருப்பூரில் நடிகர்கள் விஜய், அஜித் ரசிகர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் காயமடைந்தனர்.

திருப்பூர் அப்பாச்சி நகர் பகுதியில் நடிகர் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் நேற்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே ‘தலையா, தளபதியா’ என்று வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. ஆவேசமடைந்த இரு தரப்பும் கட்டைகளால் தாக்கிக் கொண்டனர். இதில், காயமடைந்த விஜய் ரசிகர் கருப்பையா (37), அஜித் ரசிகர்கள் சிவா (25), மோகன் (24) ஆகியோர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில், போலீசார் விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்த ராமராஜ், அன்பு, கருப்பையா, அஜீத் ரசிகர் மன்றத்தை சேர்ந்த சிவா, பழனியப்பன், மோகன் ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். ரசிகர்கள் மோதிக்கொண்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

கருத்துக் கணிப்பு

செக்ஸ் இல்லாத காதல் சாத்தியமா?

View Results

Loading ... Loading ...